Search Results for:

இடைக்காடர் சித்தர்

இடைக்காடர் சித்தர் – வரலாறு இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும். தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்… சிறு வயதிலேயே, ‘நான் யார்?’ என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியானவிடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்… ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக்கொண்டவர். காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு பசியாறுகின்றன… அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக் கொள்கின்றன. இதைப் பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே…! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர். இடைக்காடர் சித்தர் – போகர் சித்தரை...

Read More

யாக்கோபு சித்தர்

யாக்கோபு சித்தர் – வரலாறு சித்தர்கள் பற்றிச் சிந்திக்கும் போது பாமரர்களுக்குக் கூட சில கேள்விகள் எழும். அதில் பிரதானமானது சித்தர்கள், கடவுளர்களை நம்புகின்றவர்களா, இல்லையா? என்பதாகும். மதச் சின்னங்கள் இல்லாத அவர்களது தோற்றம், ஆடை அணிகளில் கூட அவர்களுக்கு இல்லாத அக்கறை, புதர்போல தாடி மீசை, கசக்கி உடுக்காத அழுக்கு ஆடை, அது கூட இல்லாத நிர்வாணத் தோற்றம் என்று சிலர் திரிவதைப் பார்க்கும் போது, அவர்களைப் புரிந்துகொள்ள சிரமமாகத்தான் இருக்கும். ‘நம்பினவர்க்கு நடராசன் நம்பாதவர்க்கு அவன் வெறும்ராசன்’ என்பது போல் தான் சித்தர்கள் பலருடைய தோற்றம், பேச்சு, வாழ்க்கை முறை உள்ளது. சமுதாயத்தைக் கடைத்தேற்ற வேண்டும், மனித சமூகம் உய்வதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்ட சித்தர்களை விட, சமுதாய எண்ணமின்றி, எல்லாமே மாயை… இதிலிருந்துவிடுபட என்ன வழி? என்று சிந்தித்து அதிலேயே உழன்று, பின் வீடுபெற்ற சித்தர்கள்தான் அனேகம். அடுத்து, சித்தர்களுக்கு மதங்கள் கிடையாதா? அவர்கள் இந்தத்...

Read More

குதம்பைச் சித்தர்

குதம்பைச் சித்தர் – பிறப்பு பகவான் மாயோன் பிறந்த யாதவ குலத்தினரின் கிராமம் இது. கிராமத்தின் மத்தியில் ஆசிரமம் போல் அழகாக அமைந்திருந்தது அந்த வீடு. யாதவ குல தலைவர் கோபாலனின் வீட்டு முன் மக்கள் கூடியிருந்தனர். கோபாலனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள், எந்த நிமிடத்திலும் குழந்தை பிறக்கலாம் என்று சூழ்நிலை. நீண்ட வருடமாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் கண்ணன் காலடியில் கதறி கிடைத்த பாக்கியம் இது. மாதவா, மாயவா நல்லபடியாகப் பிரசவம் முடிந்தால் களையம் களையமாக வெண்ணை சாற்றுகின்றேன். பால், இனிப்புகள் படைக்கிறேன். “அவல் விரும்பி அல்லவா நீ” அவல் உருண்டை செய்து தருகிறேன். அருள்செய் மாயோன் என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டார். வீட்டின் கதவு திறந்து பிரசவம் பார்த்த பெண்மணி ஓடி வந்தாள். ஐயா, ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது, தங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான். அவ்வளவுதான் கிராமமே விழாக்காலம் கொண்டு, இனிப்புகள் பரிமாறப்பட்டன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தன்று...

Read More

போகர் வரலாறு

சித்தர்கள் பற்றி சிந்திக்கும்பொழுது பாமரருக்கும் கூடப் பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் தான் போகர். மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர் தான், போகர். அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து ‘கடவுளைப் போல உதவினீர்கள்… என் வரையில் நீங்களே கடவுள்’ என்று சொல்வோம், அல்லவா…! அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும்...

Read More

கத்தி சேவல் சண்டை

கத்தி சேவல் சண்டை – முன்னுரை ஈரோடு, திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் இரத்தம் தோய்ந்த கத்தி சேவல் சண்டை நடத்தப்படுகிறது. சேவலின் வலது காலில் இதற்காகச் சிறு கத்தி கட்டப்படுகிறது. பிறகு சேவல்களை ஜாக்கிகள் பிடித்துக்கொண்டு இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றியபின் (ஆக்ரோஷம் கொள்ள) சேவல்களை மோதவிடுகின்றனர். இதில் ஆவேசம் அடையும் சேவல்கள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. மோதலில் காயமடையும் சேவல்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் அளித்து, தண்ணீர் தெளிப்பான் (ஸ்பிரேயர்) மூலம் அல்லது ஜாக்கிகள் வாயில் தண்ணீரை வைத்துச் சேவல் முகத்தில் ஸ்ரேபியர் போலத் தண்ணீரை ஊதியும் அதன் முகத்தில் வாயால் ஊதியும் மீண்டும் மோதவிடுகின்றனர். போட்டியில் வெற்றிபெறும் சேவல்கள் மீண்டும், மீண்டும் மோதவிடப்படுகின்றன. தோல்வியடைந்த சேவல்களில் சில பலத்த காயமுற்று இறந்து விடுவதும் உண்டு. கத்தி கட்டிற்கு பயன்படும் சேவல் கட்டு சேவல்கள் என்று அழைக்கபடுகின்றன. கத்தி சேவல் சண்டை – சேவல் வகைகள் கத்தி சேவல்களுக்கு...

Read More