Manathakkali Keerai Health benefits in Tamil (மணத்தக்காளி கீரை மருத்துவ பயன்கள், நன்மைகள்) is below. The benefits include cures mouth wound, stomach ulcer, help to reduce the body heat, and cure constipation.

 

Manathakkali Keerai Health benefits in Tamil

மணத்தக்காளிக் கீரை

Manathakkali Keerai Health benefits in Tamil - மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளிக் கீரை

இக்கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. ஆம், இலை, தண்டு, காய், கனி, வேர் அனைலத்துமே உபயோகப்படக் கூடியது. கசப்புத் தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவதே இல்லை. நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர்.

இலை இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வைட்டமின் பி சத்து மிகுந்தது, வற்றுப்போக்கையும், வாய்ப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிற நோய்களையும், சிறு நீர் மற்றும் வியர்வையைப் பெருக்கும், தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும், உடலைப் பலப்படுத்தும், காச நோய், தோல் நோய்களைக் குணப்படுத்தும், தாகத்தைக் குறைக்கும், சீறு நீரை வெளியேற்றும்.

 

Manathakkali Keerai Health benefits in Tamil – வாய்ப்புண் ஆற

Manathakkali Keerai Health benefits in Tamil - வாய்ப்புண் ஆற

இக்கீரையினை சாறு எடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.

மணத்தக்காளியின் பசுமையான இலைகளைத் தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி, துவையல் செய்து சாத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.

பசுமையான 5 இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இது போல ஒரு நாளைக்கு 6 முறை செய்ய வாய்ப்புண் முழுமையான குணம் கிடைக்கும்.

Manathakkali Keerai Health benefits in Tamil – வயிற்றுப்புண் ஆற 

Manathakkali Keerai Health benefits in Tamil - வயிற்றுப்புண் ஆற 

தீராத வயிற்றுப் புண் ஆற எவ்வளவோ மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டும் ஆறவில்லையா? மணத்தக்காளி கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகி வந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது 10 நாட்களாவது பருக வேண்டும்.

இவ்வைத்தியத்தின் போது உப்பு, புளி, காரத்தை முக்கால் பாகம் குறைக்க வேண்டும். மணத்தக்காளிக் காய்களை குழம்பு செய்து சாப்பிட்டாலும் வயிற்றுப்புண், குடல்புண் இவை ஆறும்.

Manathakkali Keerai Health benefits in Tamil – நாக்குப்புண் குணமாக

மணத்தக்காளியின் இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டுவர வேண்டும். இந்தக் காலத்தில் காரம் அதிகமில்லாத உணவாகச் சாப்பிட வேண்டும்.

Manathakkali Keerai Health benefits in Tamil – காயின் குணங்கள்

உடல் வலி தீரும், களைப்பை அகற்றும், உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றம், வாந்தியைப் போக்கும், இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம்.

Manathakkali Keerai Health benefits in Tamil – பழம் தரும் பயன்கள்

காது வலியைப் போக்கும், வயிற்று பொருமலைத் தணிக்கும், காய்ச்சலைப் போக்கும், கர்ப்பப்பைக்கு வலிமை தரும், பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.

உடல் சூடு குணமாக

Manathakkali Keerai Health benefits in Tamil - உடல் சூடு குணமாக

இலைச்சாறு 5 தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளைகள் குடித்து வரவேண்டும். படர்தாமரை குணமாக காய்களை அரைத்துப் பாதிக்கப்பட்ட இடங்களில் பற்றாகப் போட வேண்டும் , தினமும் இரண்டு வேலளைகள் குணமாகும் வரை பற்றிட்டு வர வேண்டும்.

மணத்தக்காளி வற்றல்

நாக்குச் சுவையின்மையை நீக்கும் தன்மையும், வாந்தீயுணர்வைக் கட்டுப்படுத்தும் தன்மையும் மணத்தக்காளி வற்றலுக்கு உண்டு. ஆதலால், கர்ப்பிணிகள் குறைந்த அளவில், தினமும் வற்றலை உணவில் சேர்த்துக்கொண்டு வரலாம், மார்புச்சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வற்றலைப் பயன்படுத்தலாம்.

 

Related Links: