The Agathi Keerai Health Benefits in Tamil is below. Other names அகத்திக்கீரை மருத்துவம் மற்றும் நன்மைகள். Some of the Benefits include help to reduce heat in the body, control the heart pumping rate, and cures the skin disorder.

Agathi Keerai Health Benefits in Tamil

அகத்திக்கீரை

Agathi Keerai Health Benefits in Tamil - அகத்திக்கீரை

அற்புதமான மருத்துவ குணம் கொண்டது இக்கீரை. அகத்தி என்றாலே, ‘முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று பொருள்படும். அகத்திக்கீரையை அகம்+தீ என்று பார்த்தால் நமது அகத்தில் உள்ளே இருக்கும் உஷ்ணத்தை(தீயை) தணிக்கும் கீரை என்று பொருளாகிறது.

Agathi Keerai Health Benefits in Tamil – இருதய படபடப்பு நீங்க

Agathi Keerai Health Benefits in Tamil - இருதய படபடப்பு நீங்க

அகத்திப் பூவை, பாசிப்பருப்போடு சேர்த்து, கூட்டு வைத்து மதிய வேளையில் தொடர்ந்து ஒரு வாரத்திற்குச் சாப்பிட்டு வந்தால் படபடப்பு நீங்கு சமானமாகும்.

Agathi Keerai Health Benefits in Tamil – மூளைக் கோளாறுகள்

Agathi Keerai Health Benefits in Tamil - மூளைக் கோளாறுகள்

மூளைப் பகுதியில் சிறு கோளாறு ஏற்பட்டால், சோம்பல், புத்தி மந்தம், புத்தி தடுமாற்றம், நினைவாற்றல் குறைவு போன்ற நோய்கள் ஏற்படும். இந்தக் கோளாறுகளை நீக்க அடிக்கடி அகத்திக்கீரையை, வெள்ளைப் பூண்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் போதும், மேற்கண்ட கோளாறுகள் நீங்கும்.

Agathi Keerai Health Benefits in Tamil – தாய்ப்பால் சுரக்க

Agathi Keerai Health Benefits in Tamil - தாய்ப்பால் சுரக்க

சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடும். குழந்தை பாலுக்காக அழும். அகத்திக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு வைத்து. அடிக்கடி தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

Agathi Keerai Health Benefits in Tamil – குடல் சுத்தமாக

Agathi Keerai Health Benefits in Tamil - குடல் சுத்தமாக

அகத்திக்கீரையை வேக வைக்கும் போது மிகுதியாகும் அகத்தி நீரைக் குடித்து வந்தால், குடல் சுத்தமாகும்.

Agathi Keerai Health Benefits in Tamil – அகத்தியால் தீரும் வியாதிகள்

  • சொறி, சிரங்கு, அரிப்பு நோய்கள்.
  • பித்தம், உடல் உஷ்ணம்.
  • சளி, இருமல், ஜலதோஷம்.
  • அடிபட்ட வீக்கம், எலும்பு மெலிவு (அல்லது) தேய்வு.
  • குடல் புண்.
  • பால் சுரப் பின்மை.
  • சிறுநீர் நோய், மூளைக் கோளாறுகள்.
  • மலச்சிக்கல், மார்பு வலி.
  • இரத்தம் கொதிப்பு.
  • தொண்டை வலி, தொண்டைப்புண்.
  • காய்ச்சல், பெரியம்மை நோய்.
  • உடல் மெலிவு(சத்தியின்மை), தலைவலி.
  • இடுமந்தை(வசியம்) முறிக்கும் சக்தி கொண்டது.

Agathi Keerai Health Benefits in Tamil – சீமை அகத்தி நன்மைகள்

சீமை அகத்திச் செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. வண்டுகடி, படர்தாமரை, சொரி, சிரங்கு, போன்ற தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. கருப்பைக் கோளாறுகளைத் தீர்க்கிறது. பூஞ்சான்களைக் கொல்கிறது. இரத்த அழுத்தக் குறைவைக் குணப்படுத்துகிறது. வயிற்று வலி, காய்ச்சல், ஆஸ்துமா, அலர்ஜி, பாம்புக் கடி, நுரையீரல் நோய்கள், ரத்தசோகை, மாதவிடாய் சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்துகிறது.

சீமை அகத்தி இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோம்பு, சாம்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பைன்ஸ் நாட்டில் பயன்படுத்துகின்றார்கள்.

Agathi Keerai Health Benefits in Tamil – வண்டுக்கடி குணமடைய

Agathi Keerai Health Benefits in Tamil - வண்டுக்கடி குணமடைய

சீமை அகத்தி இலைகளைப் பறித்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் சேர்த்து நன்கு அரைத்து வண்டுக்கடி மீது காலை, மாலை தடவி வர விரைவில் குணமடையும்.

சீமை அகத்தி மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படி ஊற வைத்து கசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி நன்றாகத் தடையின்றி வெளியேறும்.

சீமை அகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊற வைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டி தினமும் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் அனைத்தும் குணமடையும் வலியைப் போக்கும். மலக் கழிவுகள் இலகுவாக வெளியேற உதவும்.

Agathi Keerai Health Benefits in Tamil – படர் தாமரை குணமடைய

Agathi Keerai Health Benefits in Tamil - படர் தாமரை குணமடைய

சீமை அகத்தி இலைகளை அரைத்து அதற்க்குச் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துத் தினதோறும் இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க படர் தாமரை அனைத்தும் உடனே குணமடையும்.

 

Related Links: