The List of Tamil Quotes is below.

வாழ்கை கவிதை / Tamil Quotes about Life

வாழ்கை கவிதை - Tamil Quotes about Life

சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விடச் சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது.

நீ என்ன செய்தாலும் குற்றம் சொல்ல நாலு பேர் இருப்பான்

பல நேரங்களில் வாழ்க்கை…. நமக்கு கற்று தரும் பாடங்களின் சாட்சிகளாகக் கண்ணீர் வாழ்ந்துவிட்டுப் போகிறது.

ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களும் ஆகும்.

கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதனை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும், உன்னிடம்தான் உள்ளது. நிரந்தரமாக்கினால் நீ நோயாளி. தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி.

போகும் போதே என்னை ரசித்துக் கொண்டே போ… திரும்பி வரமாட்டேன் உனக்காக.. இப்படிக்கு வாழ்க்கை.

எல்லார்கிட்டயும் உண்மையா இருந்தா நீ நல்லவன் இல்ல முட்டாள்…

நாளை விடிந்தால் நடக்கும் கதை யாருக்கும் தெரியாது…

உன்னை நீயே வீண் என நினைத்தால் விடியலே கிடையாது, நீயே உலகிற்குத் தூண் என நினைத்தால் உன் வாழ்வில் இருளே கிடையாது..

எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும், அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.

வாழ்க்கையில்.. தட்டிவிட்டவர்களையும், தட்டிக்கொடுத்தவர்களையும் மறவாதே!!!

சந்தோஷம் நிறைந்த இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோசத்தை உண்டாக்கு உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்…

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை..

நேசிக்க யாருமில்லாத போது தான், யோசிக்க வைக்கிறது வாழ்க்கை..

கோடிக்கணக்கான கற்பனைகள், லட்சக்கணக்கான முயற்சிகள்,ஆயிரக்கணக்கான தோல்விகள் இருந்தாலும் ஒருசில நிஜங்களுடன் நாம் வாழ்கின்ற இந்த நிகழ்வுக்குப் பெயர் தான் வாழ்க்கை…

எவரையும் எக்கணமும் எதற்காகவும் சார்ந்திருக்காதே, வெளிச்சம் இல்லையேல் நிழல் கூட துணை நிற்காது..

முயற்சி செய்ய தயங்காதே முயலும் போது உன்னை முட்களும் முத்தமிடும்…

இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை..

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்பித்து விட்டு தான் சொல்கிறார்கள்..

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே, என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய், செய்வதை விரும்பிச் செய், செய்வதை நம்பிக்கையோடு செய்.

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு, புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு, எளிதில் வெற்றி பெறலாம் .

துன்பம் அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே..

காதல் கவிதை / அன்பு கவிதை / Love Tamil Quotes

காதல் கவிதை - அன்பு கவிதை - Love Quotes in Tamil

சிலர் மேல் கொண்ட அன்பில் எத்தனை முறை காயப்பட்டாலும் மூளை அறியும் மனம் கேட்காது அதுவே எல்லை மீறிய அன்பு..

ஏமாற்றம் ஒன்றும் எனக்குப் புதிதல்ல இன்று நீ.. நாளை யாரோ.. இதுதான் என் வாழ்க்கை…

என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்..

உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதுபோல தான் நீ எனக்கு..

நீ என்னோடு பேசுகின்ற நிமிடங்கள் குறைந்து போனாலும் நான் உன்னைப் பற்றி மனதில் நினைக்காத நிமிடங்களே இல்லை…

காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும் என்னோடு கலந்துவிட்ட உனது அன்பின் நேசமும் என்றுமே பிரியாது….

என் மேல் போர் தொடுப்பதை நிறுத்திவிடு வேண்டுமென்றால் என்னை காதல் சிறையில் ஆயுள் கைதி ஆக்கிவிடு…

உண்மையான அன்பைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை அன்புக்கு மேலான உன்னை விட இந்த உலகில் எதுவுமில்லை…

நாட்கள் வேகமாய் நகர்கின்றது ஆனால் நான் அப்படியே தான் நிற்கின்றேன் நீ என்னை விட்டுச்சென்ற இடத்தில்..

பார்த்துக்கொண்டிருக்கும் உறவை விட, காத்துக்கொண்டிருக்கும் உறவுக்குத்தான் பாசம் அதிகம்..

உன்னோடு சேர முடியாது எனத் தெரிந்தும் கூட மனது உன்னை நேசிப்பதை தவிர்க்க முடியவில்லை..

பக்கத்தில் நீ இல்லாததால் இமைகள் கூட என்னிடம் சண்டையிடுகிறது இமைகளை மூடுவதற்கு..

அழகைப் பார்த்து வருவதல்ல காதல், அழுகை வராமல் பார்த்துக் கொள்வது தான் உண்மையான காதல்..

வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே..

என்னில் வைக்கும் அன்பை மிஞ்ச எவருமில்லை உன்னைவிட அதனாலேயே உன்னை கெஞ்சி நிக்கிறேன் என்னை காதலி என்று..

எவ்வளவு தொலைவில் நீ இருந்தாலும் உன் நினைவுகள் மட்டும் என்னைத் தொல்லை செய்து கொண்டே இருக்கின்றது..

முகம் பார்க்காமல் இருந்தாலும் குரல் கேட்காமல் இருந்தாலும் என் அன்புக்குச் சொந்தமான ஒரே ஒரு உறவு நீ மட்டும் தான்…

புரிந்து கொள்ளப்படாததை விட வேதனையானது, தவறாய் புரிந்து கொள்ளப்படுவது..

நட்பு கவிதை / Friendship Tamil Quotes

நட்பு கவிதை - Friendship Quotes in Tamil

காரணமில்லாமல் களைந்து போக இது கனவும் இல்லை, காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை, உயிர் உள்ள வரை தொடரும் உண்மையான நட்பு…

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அலுவதில் கூட ஆனந்தம் உண்டு, தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதால் கூட சுகம் உண்டு…

உதவியைச் செய்து விட்டுத்தான் பேச ஆரம்பிக்கிறது நட்பு..!!

உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனை விடவும் சுட்டிக்காட்டி திருத்தும் நண்பன் தான் சிறந்தவன்…

எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு…

நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு.. ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்…

நட்பு என்பது ஆழ்கடல் கரையில் நின்று பார்த்தால் அலைகள் மட்டும் தான் தெரியும் மூழ்கிச் சென்றால் தான் உன்னைப் போன்று முத்துக்கள் கிடைக்கும்..

உயிரோடு இருக்க ஒரு பிறவி போதும் ஆனால் உன் நட்போடு வாழ பல ஜென்மம் வேண்டும்..

நல்ல நண்பனிடம் எவ்வளவு கோபமும் காட்டலாம்.. ஒரு நிமிடம் கூட சந்தேகப்படக்கூடாது…

காதல் இல்லைனா வாழ்க்கை பிடிக்காது ஆனால் நண்பன் இல்லைனா வாழவே பிடிக்காது.

நம்மை பற்றி நமக்கே தெரியாது ரகசியங்களை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த கருவிதான் நட்பு…

தோள் கொடுக்க தோழனும், தோல் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்..

முகத்தில் தெரியும் அழுகையும், சிரிப்பும் காண்பது உறவு.. அழுகைக்கும் சிரிப்புக்கும் பின் இருக்கும் காரணத்தை கண்டறிவது நட்பு…

நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல நட்பு மனதில் புதைத்து மரணம் வரை தொடர்வது தான் உண்மையான நட்பு…

சண்டை போட்டு நான்கு நாள் பேசாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல் பேசும் நண்பன் இருக்கும் வரை வாழ்க்கை சொர்க்கமே!!

காதலும் நட்பும் சந்தித்த போது காதல் கேட்டது நான் வந்துவிட்டபின் நீ எதற்கு என்று? நட்பு சொன்னது, நீ விட்டுச்சென்ற கண்ணீரை துடைக்க என்று..

நிலையான அன்புக்கு பிரிவில்லை, சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை, தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை, உண்மையான நம் நட்புக்கு என்றும் மரணமில்லை..

தன்னம்பிக்கை கவிதை / Self Confidence Tamil Quotes

தன்னம்பிக்கை கவிதை - Self Confidence

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல…
அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம். – ஹிட்லர்

நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலர் அல்ல அசையாமல் நிலையாக நிற்கும் இமயமலை போன்றது..

‘ தன்னம்பிக்கையை இழக்கிறவன் ‘ தன்னையே இழக்கிறான்!

முடியாது என்று சொல்வது
மூட நம்பிக்கை ! முடியுமா என்று கேட்பது
அவநம்பிக்கை ! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!”

நமது மன உறுதி எவ்வளவு வலுப்பெற்று உள்ளதோ,
அதற்கு தக்கப்படிதான் நமது ‘ வெற்றியின் அளவும் இருக்கும்…

வெற்றி வந்தால் நம்பிக்கை வரும். ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதனால் நம்பிக்கையை வளர்த்துக்கொள்.

நம்பிக்கை நிறைந்த
ஒருவர்” யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை !!!

‘சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு
வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப்
பார்க்கிறான், சாதிப்பவன்
ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள
வாய்ப்பினைப் பார்க்கிறான்

விழுவதும், எழுவதும் எனக்கு புதிதல்ல… ‘விழுந்தாலும் எழுவேன்… உதயமாகும் சூரியனை போல… ‘நான் வீழ்ந்து போனால் ‘என்னைத் தூக்கி விட யாரும் வேண்டாம்… ‘என்னில் ஒருவன் இருக்கிறான் . ‘அவன் பெயர் தன்னம்பிக்கை …

செய்ய முடியும் என்று நம்பு
ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது உன் மனம்
அதைச் செய்து முடிக்கும் வழிகளைக்
கண்டறியும் ஒரு காரியத்தில் வைக்கும்
நம்பிக்கை அந்தக் காரியத்தை
முடிக்கும் வழியையும் காட்டுகிறது

தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை

கடைசி நிடத்தில் கூட ஏதாவது அதிசயம் நடக்கலாம், அதனால், தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே…

‘சுமைகளைக் கண்டு நீ துவண்டு
‘விடாதே இந்த உலகத்தைச் சுமக்கும்
பூமியே உன் காலடியில் தான்

தன்னம்பிக்கை என்ற ஒன்றை உன்னிடம் இருந்து சீர்குலைக்கும் உயிர் கொல்லி நோய் தான் அச்சம் அதை போக்கும் மருந்தே தைரியம்..

வாய்ப்புக்காகக்
காத்திருக்காதே… உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்

விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால் தான் விருட்சங்கள் மேல்நோக்கி வளரும் விழும்போது விதையென விழு…. எழும்போது , விருட்சமாய் எழு …

சிக்கல்களை எதிர்கொள்ளும்
‘போது கூடவே ‘ பல திறமைகளும் வெளிப்படுகின்றன..

‘நம்பிக்கை என்ற ‘சிறு நூலிலையில் தான்.. அனைவரின் அன்பும் இயங்கி கொண்டிருக்கிறது…!!!

உயிரே போகும்
நிலை வந்தாலும்
தைரியத்தை விடாதே!
நீ சாதிக்கப் பிறந்தவன்
துணிந்து நில்,
எதையும் வெல் !!

இதுவரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்..

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல்
‘ இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி.

ஆறுதல் இல்லாமல் ‘அழுது முடித்தப் பின் வரும்
“தன்னம்பிக்கை” மிகப்பெரியது..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை . முதல் படியில் ஏறு.

இரக்கப்படுபவன், ஏமாந்து போகலாம்…. ஆனால் தாழ்ந்து போவதில்லை …

‘உதவிக்கு யாரும் இல்லை என வருந்தாதே… ‘உனக்கு துணையாக நான் இருக்கிறேன்… ‘தைரியமாக போராடு….
இப்படிக்கு தன்னம்பிக்கை

ஆம்மா கவிதை / Amma Tamil Quotes

ஆம்மா கவிதை - Amma Kavithai

கோபத்திலும் நம் மீது அக்கரையாய் இருப்பது நம் அம்மா மட்டுந்தானே…

நான் பார்த்த முதல் முகம்! நான் பேசிய முதல் வார்த்தை ! நான் மறக்கவே முடியாத முதல்! ஓவியும் என் அம்மா …

இவளருகில் தோள் சாயும் போது துன்பத்தின் சுவடுகளும் தொலைதூரம் இவள் மடியில் துயிலுறங்கும் போது
இதயத்தில் இன்பத்தின் அருவியும் கரைபுரண்டோடும் ஒருமுறை உதிக்கும் நம்மை தினம்தினம் சுமக்கும் ஒரே ஜீவன் நம் அன்னை..

அம்மா ….. ” அடி முடி தேடினாலும்
அகராதியைப் புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம். அம்மா

இன்பமான நேரம்… நீ என் மார்பில் உறங்கிக்கொண்டு இருந்தாய் சந்தோசமாக இருந்தது – ஒரு பக்கம் கவலையாய் இருந்தது என் இதயத் துடிப்பு உன்னை எழுபிவிடுமோ என்று …….

மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்.
என் அம்மா காலில் மிதி பட அல்ல. என்னைச் சுமந்த அவளை ஒரு முறை நான் சுமப்பதற்காக !

‘அம்மா அன்புக்காக ஏங்கும் ‘குழந்தைகளைக் காணும் போதெல்லாம் ‘நான் கடவுளுக்கு நன்றி சொல்வேன் ‘உன்னை எனக்கு கொடுத்ததற்கு

ஆயிரம் முறை காயப்பட்டாலும், தன்னை ஒரு முறைக் கூட காயப்படுத்தாத உறவு அம்மா !!

‘தாயின் அன்பை வெளியிட ‘உலகத்தில் எந்த மொழியிலும் ‘போதிய வார்த்தைகள் இல்லை..

அம்மா
ஏன் முகம் பார்க்கும் முன்பே, ஏன் குரல் கேட்கும் முன்பே, ஏன் குணம் அறியும் முன்பே, ஏன்னை நேசித்த ஓர் இதயம்….

என் தேவைகளை பூர்த்தி செய்வதற்க்காக! உன் தேவைகளை குறைத்துக் கொண்டவள்! நீ தானே அம்மா! .

அன்பு, அக்கறை, அரவனைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள்.. அம்மா

மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் ‘அம்மா’ என்று..

எத்தனை முறை சண்டை போட்டாலும்.
தேடிவந்து பேசும் தெய்வம் என் தாயை தவிர வேறேதும் உண்டோ …
இந்த உலகினிலே..?

அனைத்தையும் மறந்து அன்னை மடியில் தூங்கிய குழந்தை பருவம் நாம் வாழ்ந்த சொர்க்க காலங்கள் …

மழையில் நனைந்த என்னை எல்லோரும் திட்டிய போது
தலையை துவட்டி விட்டு மழையை திட்டியவள் அம்மா…

மீண்டும் கிடைக்காத
சிம்மாசனம் “தாயின் மடி”

“உன்னை விட்டு எத்தனை உறவுகள் மதிக்காமல் சென்றாலும்..! உன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உன் கண்ணீரை துடிப்பவள் தான் “அம்மா”