Siddhar Thirumoolar Life History in Tamil (Story, Tirumular Varalaru Tamil, Biography, திருமூலர் வரலாறு, குறிப்பு ). The detailed History is explained below.

Siddhar Thirumoolar Life History in Tamil

திருமூல நாயனாரும் திருமூலர் சித்தரும் ஒருவரே. இக்கருத்து சேக்கிழாரின் திருமூல நாயனார் புராணக் கருத்து. திருமூல நாயனாரின் ஞானமும், சித்தர் திருமூலரின் திருமந்திரமும் அவர் தவத்தினால் சிவநிலை அடைந்தார் என்பதையே வலியுறுத்துகின்றன. அவர் தவ வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்தார் என்ற ஒரே கருத்தை பிற சித்த நூல்களும் புராணங்களும் கூறுகின்றன.

Siddhar Thirumoolar Life History in Tamil - திருமூலர்

திருமூலர்

Siddhar Thirumoolar Life History in Tamil – அறியக்கிடைத்த( நம்பக்கூடிய) வரலாறு

நாயன்மார்களில் திருமூலர் திருநட்சத்திரம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரம், இது சிதம்பரம் முதலான அனைத்துச் சிவாலயங்களும் கொண்டுள்ள நட்சத்திரம். இந்தச் சித்தர் மூல நட்சத்திரத்தில் பிறந்ததாலேயே திருமூலர் என்று அழைக்கப்படுகிறார் என்று கொள்வதே பொருத்தமானது.

அவர் வேளாளர் குலம் ஒன்றின் 21 வது தலைமுறையைச் சேர்ந்தவர் (போகர் 7000/5737). ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகள் சமாதிக் கூடியே வாழ்ந்தவர் (போகர். 5862). அவர் திருமந்திரம் 3000 பாடல்களைப் பாடியுள்ளார்.

கடைசியில் (3000 ஆண்டு முடிவுவில்) திருவாவடுதுறையில் உள்ள சிவாலயத்தின் மேற்கேயுள்ள அரசமரத்தடியில் ஜீவ சமாதி பூண்டு அருளாட்சி செய்து வருகிறார். இதற்கு திருவாவடுதுறை தலபுராணமே சான்றாக உள்ளது.

Siddhar Thirumoolar Life History in Tamil – சேக்கிழாரின் பெரிய புராணம் வரலாறு

பாடல்கள் (3564-3591)

திருமூலர் கயிலையில் நந்தி அருள் பெற்ற நான் ம்றையோகி. பொதிகைமலையில் வாழும் குறுமுனியுடன் சில நாள் சேர்ந்து வாழும் நோக்கத்தில் கயிலை மலை இருந்து வந்து கொண்டிருந்தார். திருவாவடுதுறை வந்து அங்குப் பசுபதி நாதரை வழிபட்டு சாத்தனூரை அடைந்தார்.

அங்கு மூலன் என்னும் மாடுமேய்ப்பவன் வினைப் பயனால் இறந்துகிடக்கப் பசுக்கள் துயரத்தோடு அவனைச் சூழ்ந்து நின்றன. அப்பசுக்களின் துயரத்தை நீக்குவதற்காக தவமுனிவர் தன் உடலைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு சூக்கும உடலுடன் மூலன் உடலினுள் புகுந்து பசுக்களை யெல்லாம் சாத்தனூரில் உள்ள அவைகளின் வீடுகளில் கொண்டுபோய் சேர்த்தார்.

திரும்பி வந்து பார்க்க தன் ஆதி உடலைக் காணாமையால் அதைச் சிவன் செயலாகவே கருதி, மூலன் உடலிலேயே திருவாவடுதுறைக்குத் திரும்பி வந்து சிவாலயத்தின் மேற்கு திசையில்(குட திசையில்) இருந்த பெரிய அரசமரத்தடியில் நிஷ்டை கூடி அமர்ந்தார். ஆண்டிற்கு ஒருபாடலாகத் திருமந்திர மாலையைப் பாடினார்.

இப்படியாக 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களைக் பாடி முடித்து அங்கேயே முக்திபெற்று கயிலாய பதியின் திருத்தாளை அடைந்தார். இதே வரலாற்றைத்தான் “ திருத் தொண்டர் புராண சாரமும்”, திருத்தொண்டர் திருவந்தாதியும் சிறுசிறு மாற்றங்களுடன் கூறுகின்றன. “நந்தி அருளாலே மூலனை நாடினோம் “ என்றும் திரு மந்திரப் பாடல்வரி இதை உறுதி செய்கிறது.

Siddhar Thirumoolar Life History in Tamil – திருமூலர் சமாதி பற்றிய சித்தர்கள் கருத்து

சென்னை சித்த மருத்துவ நூல் ஆய்வு மைய நூல்கள் திருமூலர் சிதம்பரத்தில் சமாதி அடைந்துள்ளார் என்று கூறுகின்றன. இதே கருத்தை போக சித்தர் கூறியுள்ளார். போகர் “ஜனன சாகரம்“ 312 ஆம் பாடலின்படி திருமூலர் சிதம்பரத்தில் சமாதி கூடி லிங்க வடிவில் உள்ளார்.

தில்லை நடராஜர் கோவிலில் அவர் சன்னதி ஸ்ரீ மூலன் சன்னதி என்றே உள்ளது. அவருடன் வாழ்ந்த பதஞ்சலி முனிவரும், வியாக்ர பாதரும் அக்கோவிலில் சிலை வடிவில் உள்ளனர். திரு மூலர் சன்னதியை மையமாகக் கொண்டுதான் பாண்டிய மன்னர்களின் ஆதரவில் கருவூர்த்தேவரால் சிதம்பரம் நடராஜர் கோவில் கட்டப்பட்டது.

Siddhar Thirumoolar Life History in Tamil – திருமூலர் பற்றிய சதுரகிரிதல புராணக் கதைகள்

வீரசேனத்திருமூலர் கதை:

பாண்டிய நாட்டைச் சேர்ந்த இராசேந்திபுரி ஒரு சிற்றரசு. அவ்வூர் மன்னனான வீரசேனன் இரக்கமற்றவன். தன் மகிழ்ச்சிக்காகக் கொலையும் செய்யக் கூடியவன். பசி, பட்டினியால் வாடிய அவன் நாட்டு மக்களும், அவனுடைய அன்பு மனைவியும் கூட அவனை வெறுத்தனர்.

ஒரு நாள் ஒரு கொடிய நாக விஷத்தை நுகர்ந்து, அவன் இறந்துவிட்டான். அப்போது சூக்கும உடலோடு விண் வழியில் சென்று கொண்டிருந்த திருமூலர் அம்மன்னனின் உடலைச் சுற்றி அரசியாரும் மந்திரிகளும் அழுது புலம்பிக்கொண்டிருந்ததைக் கண்டார். சதுரகிரி சென்று அம்மலை இடுக்கொன்றில் தன் கல்பதேகத்தை மறைத்து வைத்ததுடன் அதற்குத் தன் முதன்மைக் சீடரான குருராஜனைக் காவல் வைத்துவிட்டு சூக்கும உடலுடன் அரண்மனைக்கு வந்து இறந்த மன்னனின் உடலில் புகுந்து வீரசேனத் திருமூலரானார்.

திருமூல வீரசேனர் அட்சியில் இராசேந்திரபுரி செழிப்படைந்தது. மக்கள் எல்லா நலங்களும்பெற்று இன்புற்று வாழ்ந்தனர். அரசியும் பழைய வீரசேனனிடம் அடைந்திராத இன்பங்களைத் திருமூல வீரசேனரிடம் அனுபவித்தாள். மன்னன் உடலில் இருப்பவர் ஒரு மகா சித்தர் என்பதைத் தெரிந்து கொண்டாள்.

அவரிடம் அன்பொழுகப் பேசி, அவர் தம் கற்பதேகத்தை மறைத்து வைத்திருந்த இடத்தையும் அத்தேகத்தையும் எரித்து அழிக்கும் முறைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டாள். பிறகு மலைவாழ் மக்கலளான பளிங்கர்களுக்கு பணம் கொடுத்து சித்தரின் உடலை அழிக்கச் சொன்னாள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் விதி விளையாடியது. நீண்ட காலமாகத் தன் குரு திரும்பி வராததால் குருராஜன் திருமூலரைத் தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தார். அவர் நகர்ப்புறம் வந்தசமயம் பார்த்து பளிங்கர்கள், அரசி கூறியபடி சித்தரின் கல்ப தேகத்தை எரித்துவிட்டனர். அன்று வேட்டைக்குச் சென்ற மன்னர் வழியில் தன் சீடன் வருவதைக் கண்டு பயந்து அவரை அழைத்துக்கொண்டு மலைக் குகைக்குச் சென்றார்.

தான் பயந்தபடி கல்ப தேகம் எரிந்து கிடந்ததைக் கண்ட திருமூலர் நடந்தவற்றையெல்லாம் ஞானத்தால் உணர்ந்து தெளிந்தார். குருராஜரைத் தனித்து தவம்புரிந்து சுரையேற வாழ்த்தி அனுப்பிவிட்டு அரண்மனைக்கு வந்தார். வந்த சில நாட்களிலேயே மீண்டும் தம் தவ வாழ்க்கையைத் தொடர சதுரகிரிக்கே திரும்ப வந்துவிட்டார்.

Siddhar Thirumoolar Life History in Tamil – வீரசேனத் திருமூலர் சம்பு கேசத்திருமூலராய் மாறிய கதை

திருவானைக்காவில் சம்புகேசன் என்ற பிராமணன் ஞானமார்க்கக் கல்வியில் சிறந்து விளங்கினான். குருவின் துணையில்லாமலே தன்னால் தவம்பயிலமுடியும் என்ற கர்வத்தில் அவன் சதுரகிரி சென்று அங்கு பிராணாயாமத்தைத் தொடங்கினான். தவறாகக் கும்பகம் செய்ததன் விளைவாக மூச்சை வெளிவிட முடியாமல் உயிர்நீத்தான்.

அவனது ஆவிபிரிந்த அரைமணி நேரத்திற்குள் அங்கு வந்த வீரசேனத்திருமூலர், அரசன் உடலிலிருந்து வெளிப்பட்டு சம்புகேசன் உடலில் புகுந்து சம்புகேசத்திருமூலரானார். தான் குடியிருந்த அரசனின் உடல் பழுது படக்கூடாது என நினைத்து அவன் உடலை ஒரு மரப்பொந்தில் வைத்து மூடினார். அந்த மகாசித்தரின் கைப்பட்ட அந்த மரப்பொந்து தானாகவே மூடிக்கொண்டது. அந்த மரம் இனி அரச மரம் என்ற பெயரில் தழைக்கட்டும் என்று வாழ்த்திவிட்டு சதுரகிரி காட்டுப்பகுதியில் மீண்டும் தம்தவ வாழ்க்கையைத் தொடங்கினார்.

Siddhar Thirumoolar Life History in Tamil – சமாதி

அந்த மலைப்பகுதியிலும் அவருக்குப் பல சீடர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களை யெல்லாம் உயர்ந்த தவயோகிகளாக உருவாக்கி சித்திபெறச் செய்தார். அதோடு “திருமந்திரம் எண்ணாயிரம்” முதலான பல நூல்களையும் எழுதி முடித்துவிட்டு சம்புகேசத் திருமூலராக அங்கேயே சமாதி பூண்டார் என்று அகத்தியரின் “செளமிய சாகரம்” கூறுகிறது.

 

Related Links: