Search Results for:

சுந்தரானந்தர் சித்தர்

சுந்தரானந்தர் சித்தர் வரலாறு நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர் என்பார்கள். அதனினும் சிறந்தது மதுரையம்பதி என்றால், துளியும் மிகைகிடையாது. அதிலும் அபிஷேக பாண்டியனின் காலத்தில் மதுரை நகரம் வடிவிலும் சரி, பொலிவிலும் சரி பூரித்துக் கிடந்தது. சிறப்பு பெற்ற மதுரை மாநகரின் வீதிகளில் அறிஞர் சங்கங்கள் நிரம்பியிருந்தன. குதிரை வீரர்களின் உலாக்களுக்கும், சிவிகைகளின் ஊடு நடைக்கும் நடுவே யாராவது இரண்டுபேர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் பேசிக்கொள்வது கவிதையாகத்தான் இருக்கும். அதில் குற்றம் காண்பதும் பின் அரண்மனை முற்றம் ஏகுவதும் சாதாரணமாக நடக்கும். தமிழ், திருநடனமாடிய நாட்கள் அவை. ஆயினும் மனித சக்தியின் புதுப்புது பரிமாணங்கள் பற்றி பெரிய ஞானம் யாருக்கும் இல்லை என்றே கூறவேண்டும். சோமசுந்தரர் ஆலயம் ஏகுபவர்கள் கூட, இறைவனை ஒரு நிகரில்லாத சக்தியாகக் கருதி பொன் கேட்டார்கள், பொருள் கேட்டார்கள். ஒருவர்கூட நிகரில்லாத ஞானத்தைக் கேட்கவில்லை… கேட்கத் தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதற்கென்றே இறைவனும் சோமசுந்தரனாய் ஒரு கட்டிளம்...

Read More

காலாங்கி நாதர்

காலாங்கி நாதர் வரலாறு காலாங்கி நாதர். இந்தப் பெயருக்குக்கூட, ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் உண்டு. அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்பார்கள். இல்லையில்லை, அவர் காலாங்கி நாதர் இல்லை. காளாங்கி நாதர்… அதாவது காளம் என்றால் கடுமையானது என்று பொருள். அப்படிப்பட்ட கரிய நிறத்தையே ஆடை போல உடம்பு முழுக்க பெற்றவர் என்றும் கூறுவர் சிலர். இதுவும் பிழை… எப்பொழுது ஒருவர் நாதர் என்று தன்னை குறிப்பிடுகிறாரோ, அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட இறை அம்சத்துக்கோ இல்லை தன்னைக் கவர்ந்த அம்சத்துக்கோ தன்னை இனியவராகவும் அடிமையாகவும் ஆக்கிக் கொண்டவர். அப்படிப் பார்த்தால் காளாங்கி எனப்படும் சிவாம்சத்துக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு காளாங்கி நாதரானவர் அவர் என்பார்கள். உண்மையில், அவர் பெயர்க்காரணம் துல்லியமாக விளங்கவில்லை. தனது பெயர்க் காரணம் பற்றி எங்கும் அவர் கூறவில்லை. காலாங்கி நாதர், தனக்கான ஜீவன்...

Read More

பிராந்தர் சித்தர்

பிராந்தர் சித்தர் வரலாறு பிராந்தன் என்றால் மலையாளத்தில் பைத்தியக்காரன், சித்த சுவாதீனமற்றவன் என்று பொருள். பிராந்தர் என்ற பெயரைக் கொண்ட இந்த சித்தரையும் மக்களில் பலர் பைத்தியமாகவே பார்த்தனர். அதாவது கண்ணால் காண்பது, காதால் கேட்பது என்பார்களே அந்த மாதிரி வகையைச் சேர்ந்தது. இந்த மண்ணில் மக்களிடம் விஞ்ஞான பாதிப்பு காரணமாக கண்ணுக்குப் புலனாவதையும், கருத்துக்குத் தெளிவாவதையும் மட்டுமே ஒப்புக் கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத காற்று, நம்மால் காண முடியாத உணர மட்டுமே முடிந்த நமது உடம்பின் உள் இயக்கம், நமது பிள்ளைகள் மற்றும் தாய், தந்தை என்று உறவுகளின் மேல் நாம் வைக்கும் பாச பந்தமெல்லாம் உணர மட்டுமே முடிந்தவை. இருப்பினும், பார்த்தால்தான் ஒன்றை நம்ப முடியும் என்கிற ரீதியில் உள்ளவர்களைத் திருத்துவதற்கென்றே வந்தவர்தான் பிராந்தர் சித்தர். ‘கண்ணுக்குப் புலப்படும் அவ்வளவிலும் நீ எதிர்பார்க்கும் உண்மையும் சத்தியமும் இருக்க வாய்ப்பில்லை… ‘சூட்சுமமாக ஒன்றை உணரத் தெரிய வேண்டும்’ என்பது பிராந்தர் சிந்தனை. பிராந்தர் சித்தர் எளிய தோற்றம் கொண்டிருந்தார்… இடையில் ஒரு துண்டுதான் அவரது ஆடை. அலங்காரத்தில் உடம்பை அழகாகப் பேணுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. அப்படிச் செய்யும் பட்சத்தில் நாம் சமூகம் என்னும் வலைக்குள் அதற்கு கட்டுப்பட்டவர்களாகி விடுகிறோம். அதுதானே உண்மை? இன்று நாம் வண்ண வண்ணமாய் உடை உடுத்துவது தங்கநகை அணிவது, தலைவாரி அழகுபடுத்திக் கொள்வது எல்லாம் நமக்காக அல்லவே…? நம்மை பார்ப்பவர்கள் நம்மை பார்த்து மயங்கிட வேண்டும், வியக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணித்தானே? குறைந்த பட்சம் அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கி விடக் கூடாது என்றால் ஒரு வேட்டி, துண்டாவது அணிய வேண்டும் என்பது தானே இன்றைய நமது வாழ்க்கை நிலை? ஒரு சமுதாய வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கும்; இதில் எளிமையாக இருந்தால் வறியவன் என்று அதற்குரிய மதிப்பை அளிப்பார்கள். செழிப்போடு அலங்காரமாக இருந்தால் செல்வந்தன் என்று சுற்றிச் சுற்றி வருவார்கள். வறுமையும் சரி, செல்வமும் சரி மனிதனை பாதிக்கிறது. இதனால் ஏதோ ஒரு வகையில் தூண்டப்பட்டு மனிதனும் பதில் வினை செய்கிறான். அந்த பதில் வினைதான் பற்று, பாசம் என்று மெல்ல வளர்ந்து, மனிதனை துளியும் கடைத்தேற விடாமல் செய்து விடுகிறது. எனவேதான்...

Read More

சிவவாக்கியர் சித்தர்

சிவவாக்கியர் சித்தர் வரலாறு இவர் சித்தர்களுள் தலை சிறந்தவர். பிறக்கும் போதே “சிவ சிவ” என்று சொல்லிக் கொண்டே பிறந்ததால் ‘சிவவாக்கியர்’ என்று பெயர் பெற்றார். இளம் வயதிலேயே ஒரு குருவை நாடி வேதங்களைப் பயின்றார். பின்பு வேற்று மொழி காரணத்தினால் வேதங்களைவிட்டு விலகினார். இந்நிலையில் காசியைப் பற்றி கேள்வியுற்று அதனை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். சிவவாக்கியர் அவரைத் தரிசித்தார். சிவவாக்கியரை அந்தச் சித்தர் இனிமையாக வரவேற்றார். அவரைச் சோதிக்க எண்ணிய சித்தர் “சிவவாக்கியா செருப்புதொழில் செய்த காசு என்னிடம் உள்ளது. இதைக் கொண்டு போய், என் தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விடு அப்படியே இந்த கசப்பாக உள்ள பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக் கொண்டு வா” என்றார். சித்தர் கொடுத்த காசுகளையும் சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்றார். கங்கையில் இறங்கி தண்ணீரைத் தொட்டார். அடுத்த நிமிடம்...

Read More

தேரையர் சித்தர்

தேரையர் சித்தர் வரலாறு அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் சித்தர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்தவைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன. மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர். அவ்வண்ணமே சிகிச்சைமுறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது. இவர் பதினாறு நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் வைத்தியகாவியம், இரசவர்க்கம், கருக்கிடை, வைத்திய சிந்தாமணி, மருத்துவ பாரதம் என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். மேலும் பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி நூல், நெய்க்குறி நூல், தயில வர்க்க சர்க்கம், சிகிச்சை ஆயிரம், யமக வெண்பா, நாடிக் கொத்து, நோயின் சாரம் முதலிய நூல்களும் பல உள்ளன. தேரையர், சித்தர்களின் கூட்டத்தில் மிகவும் தனித்துத்தெரியும் ஒருவராவார். இவர் அளவுக்கு சோதனைகளைச் சந்தித்த ஒரு சித்த புருஷரைப் பார்ப்பது அரிது. சோதனைகளே இவரைச் சாதனையாளராக ஆக்கின. மனித வாழ்வில் போட்டி, பொறாமை,...

Read More