The Reviewed Download Link for Thirumanthiram Vilakkam in Tamil PDF Download Thirumanthiram Tamil Virivurai Book (Explanation PDF in Tamil), திருமந்திரம் விளக்கம் PDF (விளக்க உரை) is Below.

Thirumanthiram Vilakkam in Tamil PDF Download

Thirumanthiram Vilakkam in Tamil PDF Download

 

Thirumanthiram Vilakkam in Tamil PDF Download

 

திருமூலர் வரலாறு

திருத்தொண்டர் புராண சாரம்.

“திருமூல தேவனையே சிந்தை செய்வார்க்குக்

கருமூல மில்லையே காண்.”

Thirumanthiram Vilakkam in Tamil PDF Download – திருமூலர் காலத்தில் தமிழ் நாட்டெல்லை

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பவ்வத்தின் குடக்கும்.”

– புறநானூறு.

என்ற புறநானூற்றுச் செய்யுளின்படி, தமிழ்நாடானது 8000 வருடங்களின்முன் வடக்கே பனிமலையாகிய இமயமலை வரைக்கும், தெற்கே உருவத்திற் சிறந்த குமரித் தெய்வத்தின் கோயிலுக்கும் தெற்கே இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைச் சேர்ந்த நாட்டின் வரைக்கும், கிழக்கே இயற்கையாய் அமையாமல் சகரர்களால் தோண்டப்பட்ட வங்கக் கடல் வரைக்கும், மேற்கே தொன்று தொட்டுள்ள, தற்காலம் அரபிக்கடல் என்று வழங்கப்படும் பழங்கடல் வரைக்கும் பரவி இருந்தது.

இமய முதல் குமரிவரை ஒரு மொழிவைத் துலகாண்ட சோழன் மணக்கிள்ளி நற்சோணையின் மகன் சேரன் செங்குட்டுவன்” எனச் சிலப்பதிகாரத்தில் கூறுகிறபடியால், கி. பி. இரண்டாம் நூற்றாண்டுவரையும் தமிழ்மொழிக்கு வட எல்லை இமயமலையாகவே இருந்தது.

அதன் பிறகுதான் தமிழ் எல்லை குறுக ஆரம்பித்தது.

Thirumanthiram Vilakkam in Tamil PDF Download – திருமூலர் என்னும் நாமம் ஏற்பட்ட காரணம்

திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரமருடன் தென்னாடு போந்தது முதல் தடவையாகும். அப்போது அவருக்குத் திருமூலர் என்ற நாமம் கிடையாது.

இரண்டாம் தடவை அவர் கயிலையினின்றும் பொதியையை நோக்கி வரும்போது, சோழநாட்டுச் சாத்தனூரில் கோகுலம் மேய்க்கும் மூலம் இறந்து கிடக்கக் கண்டு, தம் உடலை ஓர் அரசமரப் பொந்தில் சேமித்து வைத்துவிட்டு, தம் உயிரை மூலன் குரம்பையுள் புகுத்தி மூலனாக எழுந்த பின்னர் அப் பெயர் ஏற்பட்டது ஆகும்.

அவர் மூலன் குரம்பையுள் புகுந்த பின்னர் செய்த நூல் “தமிழ் மூவாயிரம்” என்ற ஒரு நூலேயாகும். மூலன் குரம்பையுள் புகுமுன்னர்,

 

“உபதேசம் முப்பது” “மந்திரம் முந்நூறு” என்ற இரண்டு நூல்கள் செய்துள்ளார். இதனைத் தமிழ் மூவாயிரத்திலுள்ள,

“மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய்த மூவா யிரம்தமிழ்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.”

என்ற பாயிரச் செய்யுளால் அறியலாம்.

இச் செய்யுளில் முப்பது உபதேசமும், முந்நூறு மந்திரமும் மூலன் உரை செய்ததாகக் கூறப்பட்டிருக்கிறதே, அந் நூல்களைப் பாடும்போது அவருக்கு மூலன் என்ற பெயர் இல்லையே என்று கேட்கலாம்.

இச் செய்யுள் மூலன் குரம்பையுள் புகுந்த பின்னர் செய்த தமிழ் மூவாயிரத்துக்குப் பாயிரச் செய்யுளாதலால் உடம்பு வேறுபாடு கருதாது உரைத்ததாகும்.

 

Related Links: