A Complete History about Seval Sandai in Tamil (சேவல் சண்டை வரலாறு, சண்டை சேவல் வகைகள்,சண்டை சேவல் உணவு, சண்டை சேவல் வளர்ப்பு முறைகள்,) and Vepoor Seval Sandai.

குறிப்பு: ( இவ் அரியச் செய்திகள் தொகுப்பு நம் பெரம்பலூர் சேவல் ஆர்வலர் ஒருவரால் நமக்குத் தரப்பட்டது. இதன் மூலம் சேவல் சண்டையினை பற்றி பல அரிய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.)

Seval Sandai in Tamil – வரலாறு

Seval Sandai in Tamil

தமிழக மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை, என வெவ்வேறு இடத்திற்கு ஏற்ப வெவ்வேறு விதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் நடத்தப்படுகிறது.

கிராமப்புறங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் நிறைவடையாது. ஜல்லிக்கட்டு காளைகளை எப்படிப் பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்து தயார் படுத்துகிறார்களோ அதேபோல சண்டை சேவல்களையும் தயார்படுத்துகின்றனர்.

பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்ற மனநிலை உண்டு. ஒரே கூண்டில் அடக்கப்பட்ட சேவல்களாக இருந்தாலும் கூட தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கும்.

அதனால் அவற்றைச் சண்டையிட செய்வது என்பது பயிற்சியாளர்களுக்கு பெரிய கஷ்டம் இல்லை. சண்டைப் பயிற்சியோடு சில கடுமையான உடற்பயிற்சிகளும் சேவலுக்கு கொடுக்கப்படுகின்றது. இதேபோல இரையும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

வழக்கமான உணவை விட உடலை வலிமைப்படுத்தும் வகையில் கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி போன்றவை கொடுக்கப்படும்.

சண்டைக்கு நன்கு தயாராகிய சேவல்களைப் பொங்கல் பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பே ரகசியமாகப் பண்ணை தோட்டங்களில் வைத்து ஒத்திகை நடத்துவார்கள். அப்போதுதான், காணும் பொங்கலுக்கு எந்த இடத்தில் போட்டி நடத்துவது, எத்தனைச் சேவல்கள் பங்கேற்கும் என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

 

Seval Sandai in Tamil – சேவல் சண்டையில் இருவகை உண்டு

1.வெப்போர், வெத்தடி அல்லது வெற்றுகால் சேவல் சண்டை

Seval Sandai in Tamil

வெற்றுகால் சேவல் சண்டை

2. கத்தி கால், கத்தி கட்டு சேவல் சண்டை

Seval Sandai in Tamil - கத்தி கட்டு சேவல் சண்டை

கத்தி கட்டு சேவல் சண்டை

 

இவ் இரண்டு வகை சண்டைக்கும் இரண்டு வெவ்வேறு வகை சேவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ் இரண்டு வகை சண்டை சேவல்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சாமானியனுக்கு தெரியாது. ஆனால் சேவல் சண்டைக் காரர்களுக்கு எளிதாகவே தெரிந்துவிடும்.

 

Seval Sandai in Tamil – வெற்றுகால் சேவல் சண்டை

Seval Sandai in Tamil - வெற்றுகால் சேவல்

வெற்றுகால் சேவல்

சென்னை, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வெற்று கால் அல்லது வெப்போர் சேவல் சண்டை நடத்தப்படுகிறது. 2011 வெளியான ஆடுகளம் படத்தில் வந்த சேவல்கள் அனைத்தும் வெப்போர் சேவல்கள் ஆகும். அந்தப் படத்தை பார்த்தாலே பல விஷயங்கள் நமக்குப் புரியும்.

Seval Sandai in Tamil – வெப்போர் வரலாறு

வெப்போர் சேவல்கள் மிகவும் கட்டுமஸ்தான உடல்வாகுடன் இருக்கும். சில சேவல்கள் இரும்பை போன்ற கழுத்துடன் இருக்கும்.

வெப்போர் சேவல்களை அசில் (Asil அல்லது aseel) என்று அழைக்கப்படுகின்றனர் காரணம் அசில் என்ற சொல் “அசல்” என்ற சொல்லின் திரிபே ஆகும். அதற்கு “சுத்தமான” அல்லது “கலப்படம் இல்லாத” என்று அர்த்தம்.

இதில் சுத்தமான வகையாக இருந்தால் மட்டும் தான் சண்டை சரியாக செய்யும். வெப்போர் சேவல்களை பொருத்தமட்டில் வேகம் மட்டும் அல்ல விவேகமும் முக்கியம்.

பெரும்பாலும் இச் சேவல்கள் பிறக்கும்போதே சண்டை போடும் குணாதிசயத்துடன் பிறக்கின்றன.

இவற்றுக்குச் சண்டை பயிற்சி அளிக்கும் போது அந்தக் குணம் மேலும் மெருகேற்றப்படுகின்றது. எந்த எதிரியை எப்படி அடிக்க வேண்டும் என்று அவற்றிற்குத் தெரியும். இவ்வகை சேவல்களுக்கு உடம்பே ஆயுதம்.

காலிலுள்ள நகங்கள் மட்டும் அல்ல கட்டை விரலுக்கு மேல் மாட்டுக் கொம்பினை போல் ஒத்த நகமும் வளர்கிறது. இதனை ”முள்” என்று கூறுகின்றனர். இந்த முள் அம்பின் முனை போன்று கூர்ப்பாக்க படுகின்றது.

சிறந்த சேவல்கள் அந்த முள்ளைப் பயன்படுத்தி எதிரி சேவலை ஒரே அடியில் கூட வீழ்த்திவிட முடியும். அடி தலையில் பட்டால் மூளை சிதறிவிடும். கழுத்தில் உள்ள எலும்புகள் கூட உடைத்து சேவல்கள் இறப்பது உண்டு.

வெப்போர் சேவல்கள் கழுத்து மற்றும் தலையினை மட்டுமே பெரும்பாலும் தாக்கும். மற்ற இடங்களில் அடித்தால் எதிரியை வெல்லவோ கொல்லவோ முடியாது.

சண்டைக்குப் பல மாதங்களுக்கு முன்னரே சேவல்கள் தயார்செய்யப்படும். பிறந்ததிலிருந்தே பேணி பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. 6 மாதத்தில் இருந்தே சண்டை ஒத்திகை பார்க்கப்படும். இதை “டப்னி” என்று கூறுவர்.

இதில் நல்ல சேவல்களை மட்டுமே விட்டுவிட்டு மற்றவற்றை விற்காமல் கொன்று விடுகின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் வேண்டாம் என்று விட்ட சேவல்களின் அடுத்த தலைமுறையில் எதிர்பார்த்த பண்புகள் வரலாம். அப் பண்புகள் எதிரியின் கைகளுக்கு போகக் கூடாது என்று அதனைக் கொன்றுவிடுவர்.

Seval Sandai in Tamil – உணவு

சண்டைக்குத் தயார்படுத்தும் வகையில் சேவல்களுக்கு கம்பு, கேழ்வரகு, கோதுமை, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை, கொள்ளு போன்ற தானியங்களை அரைத்து அதைச் சுட வைத்து பின்னர் பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி அதன் உரிமையாளர்கள் கொடுக்கின்றனர்.

இது தவிர பாதாம், பிஸ்தா, பழங்கள், சாரப்பருப்பு, முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவற்றையும் சேவல்களுக்குக் கொடுக்கின்றனர்.

சேவலுக்குச் சண்டைக்கு 21 நாட்கள் முன் சிறப்பு தயார் நடக்கும். அப்போது மிகவும் சத்தான உணவுகளுடன் நீச்சல், ஓடுதல், உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பின்பு சண்டைக்கு களம் இறக்கப்படுகின்றது.

போட்டிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்யப்பட்ட சேவல்கள் உயரம் முதலில் பார்க்கப்படுகின்றன. உயரத்திற்கு ஏற்ப சேவல்கள் சண்டைக்கு விடப்படுகின்றன.

ஒரு வெப்போர் சேவல் சுமார் ஒன்றேமுக்கால் மணி நேரம் சண்டை போட வேண்டி இருக்கும். 15 நிமிடங்கள் போர் செய்த பிறகு, 15 நிமிடங்களுக்கு இடைவேளை இருக்கும். இவற்றை “தண்ணிக்கு எடுப்பது” என்று கூறுகின்றனர். அப்போது காயங்கள் சரிசெய்யப்பட்டு, வலி ஒத்தடம் கொடுக்கப்படுகின்றது.

பின்னர் குளுக்கோஸ் போன்றவை தரப்பட்டு சண்டைக்கு மீண்டும் புதுத்தெம்புடன் வந்து நிருத்தப்படுகின்றது.

Seval Sandai in Tamil – சண்டை நேரம்

15 நி(சண்டை)+ 15 நி(1 தண்ணி)+ 15 நி(சண்டை)+ 15 நி(2 தண்ணி)+ 15 நி(சண்டை)+ 15 நி(3 தண்ணி)+ 15 நி(சண்டை) = மொத்தம் 1.45 மணி (முழு சண்டை நேரம்)நேரம் ஒரு சண்டை நடைபெறுகின்றது.

நல்ல தரமான சேவல் வகைகள் எதிரி சேவலை மூன்று நிமிடங்களில் கூட கொல்ல முடியும். இரு சேவலில் ஒன்று களத்தில் இறந்துவிட்டாலோ, களத்தை விட்டு ஓடிவிட்டாலோ, களத்தில் மயங்கி விழுந்துவிட்டாலோ எஞ்சி நிற்கும் சேவல் வெற்றியடைந்ததாகிறது.

சேவலின் (அலகு) மூக்கு மண்ணில் பட்டுவிட்டால் எதிரி சேவல் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்படும். இப்படி ஐந்தாறு போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல், ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவில்லாமல் விலை போகும். வெற்றி பெறச் சேவல், போர் வீரனைப் போல் கொண்டாடப்படும்.

வெற்றி பெற்ற சேவல்களுக்குத் தங்க நாணயம், பணம், கேடயம், மெடல் போன்றவை பரிசாக வழங்கப்படும்.

ஆடுகளம் படத்திற்கு பிறகு இவ்வகை சேவல்களுக்கு மவுசு கூடிவிட்டன.

இவ்வகை சேவல்கள் பல வகைகள் உண்டு. அவை பொதுவாக

ரோஜா (குள்ளமான சேவல்கள்), கல்கத்தா அசில், மதராஸ் அசில் என்று பிரிக்கப்பட்டாலும். அவைகள் அவற்றின் சிறகின் வண்ணங்களைப் பொறுத்தே அழைக்கப்படுகின்றன.

Seval Sandai in Tamil – சேவல் வகைகள்

ஜாவா – பச்சை வெள்ளை வண்ணம் மற்றும் கருப்பு வால்.

யாகுத் – சிவப்பு நிறம்

பீலா – மஞ்சள்

தும்மர் – சாம்பல்

சீதா – வண்ண புள்ளிகள்

நூரி – வெள்ளை

கதிர்/காதர் – கருப்பு

இவை மட்டுமின்றி பேட்டை மாதிரி (பேட்டை போன்று காட்சியளிக்கும்) கல்வா (தாடியுடன் இருக்கும்) ஆகிய வகைகள் உள்ளன.

வெப்போர் சேவல்களுடன் கத்திகால் சேவல்களைச் சண்டைக்கு விடமுடியாது காரணம் கத்திகால் சேவல்களால் வெப்போர் சேவல்களுக்கு நிகராக சண்டை போடமுடியாது. சிறிது நேரத்தில் ஒய்ந்து விடும்.

இதில் கத்தி இல்லாமல் சண்டை நடப்பதால் இதனை ஒலிம்பிக்ஸ விடக் கெடுபிடி உள்ளது.

 

Related Links: