A brief Introduction about Nattu Koli, Nattu Koli (kozhi) Vagaigal, நாட்டு கோழி வகைகள்.

தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்து, உழவுத் தொழிலுக்கு துணை தொழிலாக நாட்டுக் கோழி வளர்ப்பு இருந்து வந்துள்ளது.

ஒவ்வொரு விவசாய குடும்பத்திலும் நாட்டுக் கோழி வளர்ப்பு சிறிய அளவில் நடந்து வருகிறது. உழவுத் தொழில் செய்யும் மக்களின் குடும்பத்தேவையை பூர்த்தி செய்யும், வருவாய் அளிக்கும், முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காகவும், நாட்டுக் கோழி வளர்ப்பு நடந்து வருகிறது.

சமய சடங்குகளிலும், இறை வழிபாட்டுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றி வாழ்ந்தன.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மலை மற்றும் மலைசார்ந்த இடங்களில் அடர்ந்த காடு பிரதேசங்களிலும் மற்றும் புல்வெளிகளில் நாட்டுக்கோழிகள் தாமாகவே முட்டையிட்டு குஞ்சு பொரித்து தமது இனத்தைப் பெருகி வந்தன.

நாளடைவில் மனித வாழ்க்கையில் உழவுத் தொழிலில் நுழைந்து தமக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தது. நம் நாட்டுக் கோழி இனங்கள் குறைந்த எண்ணிக்கையில் முட்டை உற்பத்தி செய்தாலும் மிகவும் சத்துள்ளதாக கருதப்படுகிறது.

Nattu Koli – வகைகள்

மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளைப் போலவே நாட்டுக் கோழிகளிலும் பல்வேறு இனங்கள் உள்ளன என்பதை அறியும்போது, நமக்கே ஆச்சரியமாக உள்ளது.

 

இந்திய நாட்டுக் கோழிகள், கோழிகளின் மூதாதையான செந்நிற காட்டுக் கோழிகள் வம்சாவளி வந்தவை. ஆசிய கண்டத்தின் வெப்பமும், ஈரமும் நிறைந்த பரப்பு முதலியன கோழிகளின் தோற்றத்திற்கு அடிகோலின. தமிழ்நாட்டில் உள்ள 7 கோழியினங்கள்

 

1.குருவுக் கோழி
2.பெருவிடைக் கோழி
3.சண்டைக் கோழி என்னும் அசில் கோழி
4.கடக்நாத் என்னும் கருங்கால் கோழி
5.கிராப்புக் கோழி என்னும் நேக்கட் நெக்
6.கொண்டைக் கோழி
7.குட்டைக்கால் கோழி

Nattu Koli – குருவுக் கோழி இனம்

 

Nattu Koli குருவுக் கோழி

நாட்டுக்கோழி இனங்களில் மிகவும் சிறியவை குருவுக்கோழி இனமாகும்.

எடை குறைவாக இருப்பதோடு, நீண்ட காலம் அடக்கி உட்காராமல் கூடுதலாக முட்டையிடும் குணம் கொண்டது.

தாய் கோழிகள் ஓராண்டில் மூன்று தடவை, அடக்கி உட்கார்ந்து குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை.

இரண்டு மாதங்களுக்குள் குஞ்சுகளை பிறித்துவிடும் குணம் கொண்டவை. இக்கோழிகள் ஒரு தடவைக்கு 12 முதல் 14 முட்டைகள் இடும் தன்மை கொண்டவை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக அதிகமாக ஆர்வத்துடன் வளர்க்கப்படும் இனம், இந்த குருவுக் கோழிகள் தான்.

Nattu Koli – பெருவிடைக் கோழி

 

Nattu Koli - பெருவிடைக்

இந்த இனக் கோழிகள் நடுத்தர எடை உடையவை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இவ்வினக் கோழிகளை வளர்க்கின்றனர்.

அத்தலையில் ஒற்றைக் கொண்டைப் பூ கொண்டவை. இதை வருடத்திற்கு 50 முதல் 60 முட்டைகளை இடும்.

Nattu Koli – அசில்

 

Nattu Koli - அசில்

அசில் கோழி இந்தியாவின் பெருமை மிக்க பெரிய கோழி இனமாகும்.

அசில் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தை தாயகமாகக் கொண்டது, பெரும்பாலும் தமிழ்நாட்டில் அதிகமாக வளர்க்கப்படும் இனம் ஆகும்.

உண்மை அல்லது தூய்மை என்பதே அசில் என்பதன் பொருளாகும். இவ்வினம் பெரும்பாலும் சண்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் அலகு குட்டையாகவும், வளைந்தும் காணப்படும்.

முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும்,வால் சிறியதாகவும் தொங்கிக் கொண்டு காணப்படும். கால்கள் உயரமானவை மற்றும் நன்கு உறுதியானவை.

இவ்வகைக்குக் கோழி, சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை.

உற்பத்திக் குணாதிசயங்கள்

சேவல் உடல் எடை                : 3-4 கிலோ

கோழி உடல் எடை                : 2-3 கிலோ

ஆண்டு முட்டை உற்பத்தி  : 90-100

கருவுறும் திறன்                    : 66%

குஞ்சு பொரிக்கும் திறன்   : 63%

Nattu Koli – கடக்நாத் என்னும் கருங்கால் கோழி

 

Nattu Koli - கடக்நாத்-என்னும்-கருங்கால் கோழி

கடக்நாத், பொதுவாக கலமாசி என்று அழைக்கப்படும் கருப்புச் சதை உடைய கோழி இதன் பொருள்.

இந்த இனம் மத்திய பிரதேசத்தில் தோன்றியதாகும்.

இதன் உடல் உள் உறுப்புக்கள் கருமை நிறமாக இருக்கும். உடலின் தசைகள், நரம்புகள், மூளை முதலியன கருப்பு நிறத்தில் காணப்படும். இதற்குக் காரணம் மேலனின் எனப்படும் நிறமி ஆகும்.

சேவல் வேண்டுதலுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. கோழிக்குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.

பருவமடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும். தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும்.

இறைச்சி கருப்பாக, பார்வைக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும் சுவையாக இருக்கும்.

உற்பத்திக் குணாதிசயங்கள்

சேவல் உடல் எடை                                        : 1.5 – 2 கிலோ

கோழி உடல் எடை                                        : 1 – 1.5  கிலோ

ஆண்டு முட்டை உற்பத்தி                          : 105

கோழி முட்டையின் எடை 40 வாரத்தில் : 49 கிராம்

கருவுறும் திறன்                                            : 55%

குஞ்சு பொரிக்கும் திறன்                           : 52%

Nattu Koli – கிராப்புக் கோழி

 

Nattu Koli - கிராப்புக் கோழி

இந்தக் கோழி கழுத்துப் பகுதியில் சிறகுகள் இல்லாமல் வெறுமையாக இருக்கும்.

கேரளாவின் திருவனந்தபுரம் பகுதி கிராப்புக் கோழியின் தாயகமாகும்.

இந்த இனம் நீளமான உருண்டை வடிவக் கழுத்துடைய இனமாகும்.

பருவம் வயதை அடைந்த பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது.

 

உற்பத்திக் குணாதிசயங்கள்

20 வது வாரத்தில் உடல் எடை       : 1.00 கிலோ

பருவ வயது                                        : 201 நாட்கள்

40 வது வாரத்தில் முட்டை எடை  : 54 கிராம்

கருவுறும் திறன்                               : 71%

 

Nattu Koli – கொண்டைக் கோழி

கொண்டைக் கோழிகள் அரிதாகக் காணப்படும் இனமாகும். இதன் தலை மீது கொண்டைப் பகுதியில் கொத்தாக முடி இருப்பதால் இதற்கு கொண்டைக் கோழி என்று பெயர்.

இதன் கொண்டை சிறியதாக இருந்தாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

Nattu Koli – குட்டைக்கால் கோழி

கொண்டை கோழி போல, மிகவும் அரிதாகக் காணப்படும் நாட்டுக்கோழி இனமாகும்.

இதனுடைய வால் தரையை தொட்டுக் கொண்டு போகின்ற அளவிற்கு, கால்கள் குட்டையாக இருப்பதால் இதற்குக் குட்டைக்கால் கோழி என்று பெயர் ஏற்பட்டது.

Related Links:

Summary
Review Date
Reviewed Item
nattu koli
Author Rating
51star1star1star1star1star