Below is the Nattu Koli Valarpu Murai( Nattu Kozhi Valarpu, நாட்டு கோழி வளர்ப்பு முறை) in Tamil. All the forms of Nattu Koli Valarpu techniques are given below.

Nattu Koli Valarpu Murai

நாட்டுக்கோழி வளர்க்கும் முறைகள்

நாட்டுக்கோழிகளை மூன்று முறைகளில் வளர்க்கலாம். அவை

1.புறக்கடை வளர்ப்பு

2.திறந்தவெளியுடன் கூடிய கொட்டகை முறை

3. கொட்டகை முறை – புறக்கடை வளர்ப்பு

Here is List of Nattu Koli Kunju Sellers

Nattu Koli Valarpu Murai – புறக்கடை வளர்ப்பு

புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடும்.

கிராமங்களில் 5 முதல் 10 வரை நாட்டு கோழி வரையிலும், சிலர் 20 முதல் 50 வரை கோழிகள் வரை வளர்க்கின்றனர்.

இவ்வாறு வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் இரவு நேரங்களில் கீழ்க்காணும் ஏதேனும் ஒரு முறையில் அடைத்து வைக்கப்படுகின்றன.

1.மரக்கிளைகள்

2.கூடைகள்

3.மரப் பெட்டிகள்

4.மண் கொடாப்புகள்

5.திண்ணைக் கொடாப்புகள்.

6.கம்பி வலைச் சட்டங்கள்.

 

Nattu Koli Valarpu Murai - புறக்கடை வளர்ப்பு

புறக்கடை வளர்ப்பு

 

Nattu Koli Valarpu Murai - புறக்கடை வளர்ப்பு 1

புறக்கடை வளர்ப்பு 2

 

 

Nattu Koli Valarpu Murai – தீவிர முறை நாட்டுக்கோழி வளர்ப்பு

வணிக முறையில் நாட்டுக்கோழிகளை வளர்க்க முற்படுவோர் ஆழ்கூள அல்லது கூண்டு முறையைப் பின்பற்றலாம்.

இம்முறையில் பண்ணையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

இனவிருத்திக் கோழிகளை கூண்டு முறையில் வளர்ப்பது நல்லது.

 

Nattu Koli Valarpu Murai – ஆழ்கூள முறை

Nattu Koli Valarpu Murai - ஆழ்கூள முறை

ஆழ்கூள முறை

 

Nattu Koli Valarpu Murai - கொட்டகை முறை

கொட்டகை முறை

ஆழ்கூள முறை என்றால் என்ன?

தீவிர முறையில் நாட்டுக் கோழிகள் பெரும்பாலும் ஆழ்கூள முறையிலேயே வளர்க்கப்படுகின்றன.

உழவுத் தொழிலில் இருந்து கிடைக்கப் பெறும் உப பொருட்களான நெல் உமி, தேங்காய் நார், கரும்புச் சக்கை, மரத்தூள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிமெண்ட் தரை கொண்ட மேற்பரப்பில் பரப்பி அதன் மேல் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதாகும்.

குறைந்தபட்ச முதலீடு தேவை.

வெப்ப மண்டல பிரதேசங்களுக்கு ஏற்ற முறையாகும்.

விற்பனைக்காக மற்றும் பல்வேறு மேலாண்மை முறைகளைக் கையாளும்போது பிடிப்பது சிரமம். மேலும் இது அயர்ச்சியை உண்டாக்கும்.

ஈ தொல்லை சற்று குறைவு.

Here is Nattu Koli Valarpu

ஆழ்கூள பொருட்களின் குணாதிசயங்கள்

ஆழ்கூளப் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும்.

குறைந்த விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஆழ்கூளப் பொருட்கள் கடின தன்மையற்று இருக்க வேண்டும்.

ஆழ்கூளப் பொருட்கள் நச்சுத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும்.

 

Nattu Koli Valarpu Murai – ஆழ்கூளத்தை பராமரிக்கும் முறை

ஆழ்கூளத்தை தினமும் நன்கு கிளறி விட வேண்டும். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கையளவு கூளத்தை எடுத்துப் பிசைந்து பார்த்தால், கூளம் நன்றாக நொறுங்கி இருந்தால் ஈரம் மிகக் குறைவு எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஆழ்கூளம் உருண்டை ஆகிவிட்டால் ஈரம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஈரம் அதிகமானால் 200 சதுர அடிக்கு 5 கிலோ சுண்ணாம்புத் தூள் தூவி விட்டுக் கிளறிவிடுவது நல்லது.

Nattu Koli Valarpu Murai – கூண்டு முறை

Nattu Koli Valarpu Murai கூண்டு முறை 2

கூண்டு முறை

 

Nattu Koli Valarpu Murai - கூண்டு முறை 1

கூண்டு முறை

கிராமப்புறங்களில் எல்லா வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக இரவில் கோழிகளை கூடை அல்லது சிறிய கூண்டுகளில் அடிப்பார்கள்.

காலையில் புறக்கடையில் விடுவார்கள். பொரித்த குஞ்சுகளை தாய்க்கோழி முனைப்புடன் பாதுகாக்கும். இருந்தாலும் காகம், பருந்து, வல்லூறு, நாய் மற்றும் பூனைகள் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை பிடித்து உண்ணும்.

அதனால் பத்துக்கு ஆறு அல்லது ஏழு குஞ்சுகள் போக மீதமுள்ள மூன்று அல்லது நான்கு குஞ்சுகளே கோழியாக வளர்கின்றன.

இப்பிரச்சினையைத் தவிர்க்க நாட்டுக் கோழிகளை கூண்டுகளில் வளர்க்கலாம். குண்டு முறையில் வளர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த பராமரிப்பு எளிதாகி விடுகிறது.

கூண்டு அளவு

நாட்டுக்கோழிகளை வளர்க்க 6 அடி நீளம்  4 அடி அகலம், 2 முதல் 3 அடி உயரம் கொண்ட ½ அங்குல வெல்டு கம்பிகளால் ஆன கூண்டை இரும்பினால் ஆன சட்டத்தில் பூமிக்கு மேல் 3 அடி உயரத்தில் பொருத்தி, கூண்டு தரைக்கு ½ அடி கீழ் கோழி இடும் எச்சத்தைச் சேகரிக்க கோழி எச்சத் தட்டு ஒன்றையும் பொருத்தியிருக்க வேண்டும்.

நீளத்தின் மத்தியில் 3 அடியிலும், அகிலத்தின் மத்தியில் 2 அடியிலும் இதே கம்பிவலை கொண்டு தடுப்பு பொருத்தப்பட வேண்டும்.

இந்த வடிவமைப்பில் 6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட கூண்டு 4 அறைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அறையும் 3 அடி நீளம், 2 அடி அகலமாக இருக்கும்.

6 சதுர அடி கொண்ட ஒரு அறையில் 10 நாட்டுக்கோழிகளை 11 கிலோ உடல் எடை அடையும்வரை வளர்க்கலாம். அறையில் 3 அடி நீளத்தில் மத்தியில் ஒரு அடி அளவில் திறந்தது மூடக் கதவு ஒன்றை அமைக்க வேண்டும்.

கோழிகளுக்குத் தீவனம் மற்றும் தண்ணீரை அதற்கும் உண்டான தட்டுகளில் கூண்டின் உள்ளேயே தரலாம்.

கூண்டின் 4 அறைகளிலும் சேர்த்து மொத்தமாக 40 கோழிகளை வளர்க்கலாம். கூண்டின் கீழேயும் இதேபோல் கம்பி வலை அமைத்து 4 அறைகளாகப் பிரித்து அதிலும் 40 கோழிகளைக் கூடுதலாக வளர்க்கலாம்.

ஆக இரண்டு அடுக்கிலும் 8 அடியில் மொத்தம் 80 நாட்டுக்கோழிகளைப் பொரித்த முதல் நான்கு, ஐந்து மாதங்கள் வரை வளர்க்கலாம்.

இளம் குஞ்சுகளை பராமரிக்கக் கூண்டின் இரு அடுக்கிலும் மத்தியில் இரண்டு 60 அல்லது 100 வாட்ஸ் பல்பை போட வேண்டும்.

குளிர்காலத்தில் 10 நாட்களும், கோடையில் 7 நாட்களும் இளம் குஞ்சுகளை பிரத்தியோகமாக பராமரிக்கலாம். கூண்டின் தரையில் பேப்பர் விரித்து பல்பை எரிய விட்டுப் பராமரிக்கலாம்.

80 கோழிகளை வளர்க்க இரண்டு அடி அடுக்குக் கூண்டு தயாரிக்க சுமார் 8000 ரூபாய் ஆகும். 40 கோழிகளை வளர்க்க ஒரு அடுக்கு கூண்டு செய்ய சுமார் 5,000 ரூபாய் செலவாகும்.

Nattu Koli Valarpu Murai – கூண்டு முறை

நன்மைகள்

குறைந்த இடவசதியில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கலாம்.

நாட்டுக் கோழிகளின் எச்சம் கூண்டு வழியாக கீழே விழுந்து விடுவதால் எச்சத்திற்கும், நாட்டுக் கோழிக்கும் தொடர்பு இல்லை.

கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகள் சற்று அதிக உடல் எடை மற்றும் சிறந்த தீவன மாற்றுத் திறன் கொண்டது.

தீவனம் அளிக்கும் நேரமும், தண்ணீர் அளிக்கும் நேரமும் குறைவதால் கூலி ஆள் அதிகம் தேவைப்படுவது இல்லை. மேலும் சுகாதாரமான முறையில் தீவனம் மற்றும் தண்ணீர் அளிக்க முடியும்.

காகம், பருந்து, வல்லூறு போன்றவற்றினால் கோழிகளுக்கு ஏற்படும் இறப்பினை தவிர்த்து முறையான வளர்ப்பில் 80க்கு 75 குஞ்சுகளுக்கு மேலான வளர்த்து விற்பனை செய்ய முடியும்.

கோழிகள் சுத்தமாக வளரும் மற்றும் தடுப்பூசி போடுவது எளிது.

 

Download: Nattu Koli Valarpu in Tamil Pdf