Nattu Koli Pannai Amaippathu Eppadi (நாட்டு கோழி பண்ணை அமைத்தல்).  பண்ணை அமைக்கும் முறை முக்கிய குறிப்புகள் மேடான நிலம், கட்டிடத்தின் அமைப்பு திசை, பண்ணையின் நீளம் மற்றும் அகலம், தட்பவெப்ப சூழ்நிலை.

தீவிர முறையில் நாட்டுக் கோழிகளைக் கொட்டகை அமைத்தே வளர்க்க முடியும்.

Nattu Koli Pannai Amaippathu Eppadi

நாட்டுக்கோழிகளை மழை, வெயில் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கவும், இரவு நேரங்களில் நரி, ஓநாய், காட்டு நாய் போன்ற விலங்குகள் நுழைந்து தாக்காத வண்ணம் அவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கவும, திருடர்களிடமிருந்து பாதுகாக்கவும், தீவன மற்றும் இனவிருத்திக் கால மேலாண்மையை எளிதாக்கவும் கொட்டகையமைப்பு அவசியமாகும்.

நாட்டுக்கோழிகளை வளர்க பண்ணை இடத்தைத் தேர்வு செய்யும் பொழுது பின்வரும் கருத்துக்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவையாவன

Nattu Koli Pannai Amaippathu Eppadi

மேடான நிலம்

நாட்டு கோழிப் பண்ணை அமையக்கூடிய இடம், நீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடி விடக் கூடிய நல்ல மேட்டு நிலமாக இருத்தல் அவசியம்.

குடிநீர்

நாட்டுக்கோழிகளுக்கான குடிநீர் சுத்தமானதாக தடையின்றிக் கிடைக்கும் இடமாக இருத்தல் வேண்டும்.

மண் அமைப்பு

களிமண் மற்றும் மணற்பாங்கான இருவகை மண்ணும் சரிவர கலந்த நிலமே கோழி வளர்ப்புக்கு ஏற்றதாகும்.

மின்சார வசதி

கோழி பண்ணை அமையவிருக்கும் இடத்தில் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான வெப்பம் தடையின்றி கிடைக்கும் வண்ணம் மும்முனை மின்சார வசதி அவசியம் இருக்க வேண்டும்.

இடுபொருட்கள்

கோழிக்குஞ்சுகள், தீவனம், பண்ணைக்குத் தேவையான உபகரணங்கள் ஆகியவை மிக அருகிலேயே கிடைக்கும் வண்ணம் பண்ணை இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி

மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே பண்ணை அமைத்தால் கோழிகளுக்கு அடிக்கடி தொந்தரவு ஏற்பட்டு் உற்பத்தி குறைந்துவிடும்.

அடிக்கடி ஆள் நடமாட்டம் இருந்தால், பிற பகுதியில் இருந்து பண்ணைக்குள் நோய்கள் பரவ ஏதுவாகிவிடும்.

 

Nattu Koli Pannai Amaippathu Eppadi –

பண்ணை அமைக்கும் முறை

கட்டிடத்தின் அமைப்பு திசை

Nattu Koli Pannai Amaippathu Eppadi - kottagai

கட்டிடங்களை, கிழக்கு மேற்காக நீளவாக்கில் அமைத்து இருமுனைகளின் சுவர்களைக் கூரை வரை உயர்த்திக் கட்டுவதே சிறந்த அமைப்பு முறையாகும்.

அடித்தளம்

Nattu Koli Pannai Amaippathu Eppadi - அடித்தளம்

நிரந்தர கோழி வளர்ப்பு கட்டிடங்களுக்கு கான்கிரீட்டில் அடித்தளமும், தரையும் அமைக்க வேண்டும்.

பக்கவாட்டுச் சுவர்

Nattu Koli Pannai Amaippathu Eppadi - பக்கவாட்டுச் சுவர்

பக்கவாட்டுச் சுவர் 1 முதல் 1 1/2 அடி இருக்க வேண்டும் அதற்குமேல் 4 முதல் 5 அடி வரை கம்பி வலை மூலம் அமைக்க வேண்டும்.

இதற்கு பதிலாக விலை குறைவான மீன் வலை அல்லது மூங்கில் தட்டு போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

பக்கவாட்டுச் சுவர்கள் மேலுள்ள பகுதி முழுமையும் கம்பி வலை அல்லது இரும்புக் கம்பிகள் மூலம் அமைக்கப்பட வேண்டும்.

கூரைப் பொருட்கள்

கீற்றுகள், கல்நார் ஓடுகள், மங்களூர் ஓடுகள், அலுமினியத் தகடுகள் ஆகியவற்றைக் கூரை பொருட்களாகப் பயன்படுத்தலாம்.

கூரையின் உயரம்

அஸ்பெஸ்டாஸ் அல்லது ஓட்டுக்கூரை அமைத்தால், கூரையின் உயரம் 12-15 அடி இருக்க வேண்டும்.

பக்கவாட்டு பகுதியில் கட்டிடத்தின் உயரம் குறைந்தது 8 அடி இருத்தல் வேண்டும். கூரை வீடுகளில் பக்கவாட்டுப் பகுதி 6 அடி வரை இருப்பதே போதுமானது.

கூரையின் விளிம்பு பக்கவாட்டில் 2.5 முதல் 4 அடி வரை வெளிப்புறம் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

பண்ணையின் நீளம் மற்றும் அகலம்

கோழிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு கட்டடங்களின் நீளத்தைத் தேவையான அளவுக்கு நீட்டி அமைத்துக் கொள்ளலாம்.

கட்டிடங்களின் அகலம் 25 அடிக்கு மேல் அமையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். காற்று ஒருபுறம் நுழைந்து, மறுபுறம் வெளியேரும் போது தான் கோழிகள் முழு நலத்துடன் வளரும்.

உதாரணமாக 20 அடி அகலம் 60 அடி நீளம் உடையக் கொட்டகையில் 400 முதல் 600 கோழிகள் வளர்க்கலாம்.

கோழி கொட்டகையின் அகலம் 20 அடி இருக்க வேண்டும். கொட்டகையின் நீளம் கோழிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு அமைத்துக் கொள்ளலாம்.

இடவசதி

பிறந்ததிலிருந்து 1 மாதம் வரை 1 குஞ்சுக்கு 1/2 சதுர அடியும், இரண்டிலிருந்து மூன்று மாதம் வரை 1 கோழிக்கு 1 சதுர அடியும், 4 மாதத்திற்குப் பிறகு ஒரு கோழிக்கு 2 முதல் 3 அடி சதுர அடி அவசியம் தரவேண்டும்.

பண்ணையின் அறைகள்

ஆழ்கூள முறை வளர்ப்பு வளர்ப்பில் 15 அடி நீளத்திற்கு ஒரு அறையாக பிரிக்க, தற்காலிகமாகத் தட்டுகளையும், மரச்சட்டங்களில் கம்பி வலையைப் பொருத்தி பயன்படுத்தலாம்.

எருக்குழி

பண்ணையின் பின் பகுதியில் நல்ல ஆழமான எருக்குழி ஒன்றை அமைக்க வேண்டும்.

கோழிகளை விற்பனை செய்து அகற்றியவுடன் ஆழ்கூளப் பொருட்களை எருக்குழியில் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

 

Nattu Koli Pannai Amaippathu Eppadi – தீவன சேமிப்பு அறை

கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தீவனம் சேமிப்பு அறையைக் கட்ட வேண்டும்.

மூலதனத்தைப் பொறுத்தும், நாட்டுக்கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் நாட்டுக்கோழிகளுக்குக் கொட்டகையை பின்வருமாறு தனித்தனியாக உருவாக்க வேண்டும். அவையாவன

  • குஞ்சு கொட்டகை
  • வளரும் கோழிகளுக்கான கொட்டகை
  • வளர்ந்த கோழி மற்றும் இனவிருத்திக் கோழிகளுக்கான கொட்டகை.

 

Nattu Koli Pannai Amaippathu Eppadi – கோழி

பண்ணையில் நிலவ வேண்டிய தட்பவெப்ப சூழ்நிலை

வெப்பநிலை : 18℃(15℃-20℃)

உயிர் வளி : 20 %

கார்பன் டை ஆக்ஸைடு : 0.5%

அமோனியா : <20 பிபிஎம்

ஆழ்கூள ஈரப்பதம் : 15-20%

 

Other Links: