Kasini Keerai Health Benefits in Tamil is below. The benefits include Control Diabetes, Increases Immunity, Cures fever, help to Lower the Body weight(burn fat), Reduces the body heat, and increases the white blood cells count in the body. Other names கசினிக் கீரை மருத்துவ நன்மைகள்.

Kasini Keerai Health Benefits in Tamil

Kasini Keerai Health Benefits in Tamil - கசினிக் கீரை

கசினிக் கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. காசினிக்கீரைக்கு மூலிகை மருத்துவத்தில் அதிக முக்கியத்துவம் உண்டு. உடல் சூட்டால் அவதிப்படுபவர்களுக்கு காசினிக் கீரை சஞ்சீவியாக உதவுகிறது.

Kasini Keerai Health Benefits in Tamil – உடல் எடை குறைய

 Kasini Keerai Health Benefits in Tamil - உடல் எடையைக் குறைக்க

குண்டாக இருப்பவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன். உடலைச் சீராக வைத்து. உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை சூப் செய்து அருந்தி வந்தாலும் உடல் எடை குறையும்.

Kasini Keerai Health Benefits in Tamil – சர்க்கரை நோயாளிகளுக்கு

Kasini Keerai Health Benefits in Tamil - சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு காசினிக் கீரை ஒரு அற்புத மருந்தாகும். காசினிக் கீரை, சர்க்கரை நோயினால் எற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடவைக்கும். காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து வைத்துக்கொண்டு. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் 100 மி.லி. வெந்நீரில் 1 தேக்கரண்டி அளவு கலந்து அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு காசினிக் கீரை நல்ல மருந்து. காசினிக் கீரை சூரணத்தைத் தேனில் குழைத்து உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். காசினிக் கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குச் சென்றுவிடும். இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்றுப் போட்டு கட்டி வந்தால் வெகு விரைவில் புண்கள் ஆறிவிடும்.

Kasini Keerai Health Benefits in Tamil – நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

Kasini Keerai Health Benefits in Tamil - நோய் எதிர்ப்பு சக்தி

காசினிக் கீரையை பாசிப்பருப்படன் வேகவைத்துக் கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Kasini Keerai Health Benefits in Tamil –  தாது விருத்தியாடைய

காசினிக் கீரைக்கு தாதுவை விருத்தி செய்யும் குணம் உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் தாது விருத்தியாகும்.

இது நல்ல ருசியுள்ள கீர. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் கீரை. இக்கீரைத் தேக உஷ்ணத்தை சமண்படுத்தக் கூடிய சக்தியை கொண்டது. மூலிகை வைத்தியத்தில் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Kasini Keerai Health Benefits in Tamil – ஆறாது புண் ஆற

Kasini Keerai Health Benefits in Tamil - ஆறாது புண் ஆற

சிலருக்குப் புண் ஏற்பட்டுவிட்டால், அவ்வளவு சீக்கிரம் ஆறவே ஆறாது. மிகவும் சிரமப்படும் இவர்கள், இக்கீரையை மைபோல அரைத்து புண்கள் மேல் கனமாக வைத்துக் கட்டிவந்தால், ஒரு வாரத்தில் நன்றாகிவிடும்.

Kasini Keerai Health Benefits in Tamil – உடலில் சூட்டைத் தணிக்க

கானாம் வாழைக் கீரையோடு, தூதுவளைக் கீரையையும் சேர்த்து, கூடவே பாசிப்பருப்பையும் கலந்து கடைந்து அவ்வப்போது வாரத்திற்கு இரு முறையோ அல்லது தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் “உடல் காங்கை” என்னும் உடல் சூடு தணிந்துவிடும்.

Kasini Keerai Health Benefits in Tamil தீரும் நோய்கள்

  • இதன் வேர் காய்ச்சலை குணமாக்கும் சக்தி கொண்டது.
  • ரத்தத்தைச் சுத்தம் செய்து, இரத்தத்தை விருத்தி செய்யும்.
  • மூலச்சூட்டைத் தணிவிக்கும்.
  • உயிர்ச் சத்துக்கள் கொண்டது, எனவே உடலுக்கு நல்லதைச் செய்யும்.
  • வாரத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ, பாசிப்பருப்புடன் கலந்து சாப்பிட்டு வருவது உடல்நலத்திற்குப் பயன்தரும்.
  • காய்ச்சலைப் போக்கும்.
  • மேலும் இக்கீரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு பெரும்பாடு நோய்களைக் குணமாக்கும்.
  • பயனுள்ள கீரை, அடிக்கடி பயன்படுத்த வேண்டிய கீரை.

 

Related Links: