Here is the Method of Azolla Cultivation in Tamil. The easy method of Azolla Cultivation in Tamil is explained. Other names அசோலா வளர்ப்பு முறைகள், அசோலா வளர்ப்பது எப்படி, உற்பத்தி.

Azolla Cultivation in Tamil

Azolla Cultivation in Tamil below trees

அசோலா மர நிழலில்

Azolla Cultivation in Tamil

 

அசோலாவின் கிட்டத்தட்ட ஆறு வகைகள் உள்ளன. இதில் நம் தமிழ்நாட்டு பகுதிகளில் நன்கு வளரக் கூடியவை அசோலா பின்னேட்டா. அசோலா ஒருவகையான மிதவை தாவரம்.

அசோலாவில் அதிக புரதச்சத்து இருப்பதால் இதை சாப்பிடும் கால்நடைகள் நன்றாக வளரும். இதற்கு கம்மல் பாசி என்று மற்றொரு பெயரும் உண்டு.

ஆடு, மாடு, கோழி. மீன் போன்ற அனைத்து  கால்நடைகளுக்கும் அசோலாவை தீவனமாக அளிக்கலாம். நாட்டுக்கோழிகளுக்கு அசோலா தருவதால் உடல்நிலை உடல் எடை நன்றாக கூடும்.

அசோலா நன்றாக வளர 30% வெளிச்சம் இருந்தால் போதும். அதிக வெளிச்சம் இருந்தால் அசோலா நன்கு வளராது.

அசோலா தயாரிக்க வேண்டிய பொருட்கள்

சாணம், பாறைத்தூள், அசோலா, செம்மண், தண்ணீர்.

உங்களுக்கு பாறைத்தூள் கிடைக்காவிட்டால் கடைகளில் கிடைக்கும் ராக்பாஸ்பேட் பயன்படுத்தலாம். இது இயற்கையானப் பொருள் தான்.

Azolla Cultivation in Tamil – வளர்ப்பு முறை

Azolla Cultivation in Tamil - shed with Pond

Azolla Cultivation in Tamil

 

தொட்டியில் 7செ.மீ முதல் 10 செ.மீ உயரம் வரை தண்ணீரை நிரப்பி. ஒரு கிலோ சாணம், ஒரு கைப்பிடி பாறைத்தூள், ஒரு கைப்பிடி அசோலா விதை ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி விட வேண்டும்.

இந்த பாறைத்தூள் தான், அசோலா வளர்வதற்கு தேவையான பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துகள் உள்ளன. அதனால்தான், கட்டாயம் பாறைத்தூள் போட வேண்டும் என்று சொல்கிறோம். சில பகுதியில், பாறைத்தூள் இருக்காது. அங்கு ஆழ்குழாய்க் கிணறு எடுக்கும்போது, வெளியில் வந்த மண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எல்லாவற்றையும் முறையாக செய்தால் அடுத்த ஒரு வாரத்தில் பத்துமடங்கு அளவுக்கு அசோலா பெருகியிருக்கும். தொடர்ந்து சாணம் மற்றும் பாறைத்தூளை தொட்டிலில் போட்டு வந்தாலே, அசோலா பல்கிப் பெருகி விடும். உங்கள் பகுதியில் உள்ள பாறைகளில் இருந்து கிடைக்கும் தூள் தான் பாறைத்தூள்.

ஒருவேளை உங்கள் பகுதியில் பாறைத்தூளில் இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் குறைவாக இருந்தாலும், அசோலா பெருகுவதற்கு நாட்கள் பிடிக்கும். இந்த குறையை போக்க கடைகளில் விற்கப்படும் ராக்பாஸ்பேட் தூளை, ஒரு கைப்பிடி அளவுக்கு போடலாம். பாறைத்தூள் கிடைக்காத பகுதிகளில் உள்ளவர்கள், இந்த ராக் பாஸ்பேட் தூளைப் பயன்படுத்தலாம். இது இயற்கையான பொருள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Azolla Cultivation in Tamil – சத்துக்கள்

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து என முக்கியமான சத்துக்கள் ஒருங்கே அடங்கிய அதிசய தாவரம் தான் இந்த அசோலா.

அசோலா நன்கு வளர்ந்த பிறகு 100 சதவீதத்தில் 25 சதவீதம் எடுத்தால் போதுமானது. அதிகமாக எடுத்தால், அசோலா மீண்டும் வளர அதிக நாட்கள் பிடிக்கும்.

Related Links: