The Reviewed Download For Agathiyar Books Tamil PDF Free Download – Today is below. Other Download names அகத்தியர் நூல்கள் PDF. Find the links for Books below.

Agathiyar Books Tamil PDF Free Download

Agathiyar Books Tamil PDF Free Download

Agathiyar Books Tamil PDF Free Download

 

Agathiyar Books Tamil PDF Free Download – Agathiyar Varalaru

அகத்திய முனிவர்

காப்பு

“உலகம் இன்பி லுயர்ந்து சமம்பெறத்

திலக மாகத் திகழ்ந்தருள் தென்முனி

அலகில் மாக்கதை யானறிந் தோதிடக்

குலவு மாமத குஞ்சரங் காப்பதே.”

 

அகத்தியர் என்பார் இற்றைக்குப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னர் ஈண்டு அவதரித்து நின்ற ஓர் பெரியார் என்பதை அறியார் மிக அரியர். இவர் அருந்தவக் கொள்கையில் திருந்தி விளங்கிய பெருந்தகையாளர். வைய முய்ய வந்த தெய்வ நிலையினர். பொய்யறவொழுகிய மெய்யறிவாளர்.

மன்னுயிர்க்கெல்லாம் இன்னருள்செய்து எண்ணரிய நலங்களை யெங்கும் பரப்பிய புண்ணிய நீரராய் நின்ற புனித உருவினர்.

இம்முனிவர் குலதிலகத்தை மனமொழி மெய்களால் நினைந்து போற்றி வணங்கி வாழ்ந்த மாதவர் பலர்; மன்னவர் பலர்; வானவரும் பலர்; தானவரும் பலர்; முன்னிருந்தோர்க்கும் பின்வருவோர்க்கும் தவ நிலைக்கு இவர் ஓர் தனி நிலையாயுள்ளார்.

இந் நிலவுலகில் நிலவிவாழும் உயிர்களெல்லாம் என்றும் நன்றியறிவோடு நின்று போற்றுதற்கு உரியார் யார்? என்று தமக்குள்ளேயே ஒருவரை யொருவர் முனிவர்கள் ஒருமுறை வினவியபோது அவர், அகத்தியர் யாவர் என அறிவுடையாரனைவரும் ஒருமுகமாக உவந்து கூறினர்.

Agathiyar Books Tamil PDF Free Download – பிறப்பு

கும்பமுனி,கலசமுனி, குடமுனி, கும்ப சம்பவன் என்பன இவர்க்குப் பெயர்களாக அமைந்துள்ளன. அவை பாவும் இவர் குடத்திலிருந்து உதித்தனர் என்பதை உணர்த்திநிற்கின்றன. கும்பம் – குடம். சம்பவம் – பிறப்பு.

பிறவாநிலையில் வந்துள்ளர்களது பிறப்பு முறையெல்லாம் பெரும்பாலும் புதுமையாகவே பிறந்திருக்கின்றன. அவற்றுட்சில சரித்திர ஆராய்ச்சிக்கு விருத்தமாய்க் காணப்படுகின்றன.

சில, வியப்பிற்கேதுவாய்யுள்ளன; சில, புனைந்துரையோ என நினைந்துகொள்ள நேர்கின்றன; சில, தோற்றத்தில் இகழ்ச்சிக்கு ஏதுவாய்த் தோன்றுகின்றன; இன்ன வற்றையெல்லாம் நம்மனேரது பிறப்பு முறையோடு ஒற்றித்து நோக்குதல் பெரும்பிழையே யாகும். எனெனில் அந்நோக்கு நம்மைப் புன்மையில் போக்கி விடுகின்றது.

அதனுலேதான் நதி மூலத்தையும், முனி மூலத்தையும் முனைந்து காணலாகாதென மூதறிவாளர் புனைந்து கூறியுள்ளார். கண்டால் தம் நிலைமைக்கேற்றவாறு. சில நிலைகளை மலைவாகக் காணநேரும்; அதனுல் மனங் கோணலாம்; ஆகவே அவரது சிறப்பு நலங்களை மதியாது சிறுமையுறவரும். அங்ஙனம் வந்தவரை நோக்கித்தான் கபிலர் ஒருமுறை சிந்தை நொந்து என்று ஓதி யுணர்த்தினர்.

“ சிறப்பும் சீலமும் அல்லது

பிறப்பும் நலம் தருமோ? பேதையீரே?”

கன்னைது பிறப்பு நிலையைக் குறித்துக் கிருபாசாரியார் ஒருமுறை சிறிது இகழ்ந்து கூறிய பொழுது துரியோதனன் பெரிதும் சினந்து “ பெரியாரது பிறப்பின் பெற்றியை யார்காணும் காணவல்லர் ? அவர் தம் அருமையறிந்து போற்றுமல் சிறுமைகண்டு தூற்றுதல் அறிவிலிகள் சேயலேயாம்;” என்று விரைந் தெழுந்து அவையிலிந்தவ ரெல்லாரும் வியந்துகொள்ளும்படி முழங்கி நின்றன.

 

Related Links:

Summary
Review Date
Reviewed Item
Agathiyar Books
Author Rating
51star1star1star1star1star