The Free Download Link for 18 Siddhargal History in Tamil PDF Download is Below. The other Download Names 18 சித்தர்கள் வரலாறு PDF,18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு PDF and 18 Siddhargal Life History PDF Download.

18 Siddhargal History in Tamil PDF Download

 

18 Siddhargal History in Tamil PDF Download, 18 சித்தர்கள் வாழ்க்கை வரலாறு PDF

 

18 Siddhargal History in Tamil PDF Download – Click Here

18 Siddhargal

  1. திருமூலர்
  2. இராமதேவ சித்தர்
  3. கும்பமுனி
  4. இடைக்காடர்
  5. தன்வந்திரி
  6. வால்மீகி
  7. கமலமுனி
  8. போகர்
  9. மச்சமுனி
  10. கொங்கணர்
  11. பதஞ்சலி
  12. நந்தி தேவர்
  13. போதகுரு
  14. பாம்பாட்டி சித்தர்
  15. சட்டைமுனி
  16. சுந்தரானந்தர்
  17. குதம்பைச்சித்தர்
  18. கோரக்கர்

 

“சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.

 

எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்

  • இயமம் – கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
  • நியமம் – நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்.
  • ஆசனம் – உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
  • பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைத் தடுத்தல், வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
  • பிராத்தியாகாரம் – புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரமாம்.
  • தாரணை – தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
  • தியானம் – தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
  • சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.

எண் பெருஞ் சித்திகளை விளக்கம்

  1. அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  2. மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
  3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  4. கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
  7. ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  8. வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

 

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன.

சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

Source: Wikipedia

 

 

Other Download Links: