Below is the Arai Keerai Benefits in Tamil. All the health benefits of Arai Keerai is explained. Other names Arai Keerai Nanmaigal in Tamil, அரை கீரை பயன்கள், அரைக்கீரை மருத்துவ பயன்.

Arai Keerai Benefits in Tamil – அரைக்கீரை

Arai Keerai Benefits in Tamil

நாம் பயன்படுத்தும் கீரை வகைகளில் அரைக்கீரையின் ஒன்று. அரைக்கீரை, கிள்ளுக்கீரை, அறுகீரை என்ற பெயர்களிலும் அழைத்து வருகின்றனர். அரைக்கீரையின் மேற்புறம் பச்சை நிறமாகவும் ஆடிப்பூரம் மெல்லிய செந்நிறமாகவும் இருக்கும். காம்புகளிலும் செந்நிறம் காணப்படும்.

அரைக்கீரை அதன் விதை இரண்டுமே உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. அரைக்கீரையில் தங்கச்சத்து, இரும்புச்சத்து போன்ற சத்தும் நிறைந்துள்ளன. அரைக்கீரை ஒரு சிறந்த பத்திய உணவு என்றால் அது மிகையாகாது.

100 கிராம் அரைக்கீரையில் சுண்ணாம்பு சத்து 364 மில்லிகிராம், மணிச்சத்து 52 மில்லிகிராம், புரதச்சத்து 38.5 மில்லிகிராம் நிறைந்துள்ளது. அரைக்கீரை மருத்துவத்தில் சிறந்த மருந்தாக இருக்கிறது.

அரைக்கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கப்படுகிறது.

அதோடு பிரசவத்தால் ஏற்படும் உடல் மெலிவைப் போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது.

மேலும் அரைக் கீரையில் உள்ள சத்துக்கள் தாய்ப்பாலில் கலந்து, பிறந்த குழந்தைக்கு நோய் அணுகாமல் தடுக்கின்றது.

அரைக்கீரையை பிரசவித்த பெண்கள் உட்கொள்ளும் போது அவர்களுக்குச் சீதளம் வராமல் கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள் பாதுகாக்கின்றன. இதைச் சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல், ஜன்னி, வாத நோய் ஆகிய நோய்கள் குணமாகும்.

பெயருக்குத்தான் இது அரைக்கீரையே தவிர இக்கீரை எல்லாச் சத்துக்களும் கொண்ட முழுக்கீரையே ஆகும். எல்லா மக்களுக்கும் ஏற்றக் கீரை இது.

Arai Keerai Benefits in Tamil – கீரையின் நன்மைகள்

வாயு நீங்க

இக்கீரையுடன் வெள்ளைப் பூண்டு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் இவைகளைச் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் சேர்த்து, தினசரி உண்பவர்களுக்கு வாயு தொந்தரவு நீங்கிவிடும்.

சளி இருமல் குணமாக

அரைக்கீரையுடன் அதிக அளவில் வெள்ளைப் பூண்டு சேர்த்துக் கடைந்து, தினசரி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் மட்டுப்படும்.

பசி எடுக்க

பலருக்குப் பசியே எடுக்காது, மூன்று வேளைகள் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்திற்காக ஏதோ சாப்பிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் இக்கீரையைக் கடைந்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பசி எடுக்கும், கடைந்த அரைக்கீரையை சாப்பாட்டுக்கு முன் சாப்பிடுவது நல்லது.

பிரசவித்த பெண்களுக்கு பலம் பெற

Arai Keerai Benefits in Tamil - பிரசவித்த பெண்களுக்கு

பிரசவித்த பெண்கள் பலமிலந்து காணப்படுவது இயற்கை. நெய்வீட்டு, கீரையை வதக்கியோ, கடைந்தோ சாப்பிட்டு வந்தால் தேகத்தில் பலம் ஏறும். குழந்தைகளுக்குத் தேவையான பாலும் சுரக்கும்.

Arai Keerai Benefits in Tamil – மலச்சிக்கல் தீர

Arai Keerai Benefits in Tamil - மலச்சிக்கல் தீர

அரைக்கீரையை சிறிய வெங்காயத்துடன் வதக்கி தினசரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

Arai Keerai Benefits in Tamil – ஆண்மை இல்லாதவர்

எதிலும் அளவு வேண்டும் என்பார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இன்றைய நவநாகரிக யுகத்தில் திருமணம் ஆகாத இளைஞர்களும் சரி திருமணமானவர்களும் சரி… அளவுக்கு மீறிய “உடல் தொடர்பு” கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதனால் ஏகப்பட்ட சத்தியினை இழக்கும் ஆபத்திற்கு ஆளாகின்றனர்.

Arai Keerai Benefits in Tamil – இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்

  • மலச்சிக்கல் தீரும்.
  • வாத சம்பந்தப்பட்ட நோய்கள் போகும்.
  • ஜலதோஷம் போக்கும்.
  • நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
  • ஆண்மைக் குறைவு நீங்கும்.
  • உடல் பலவீனம் போகும்.
  • குளிர் காய்ச்சல் நீங்கும்.
  • பிடரி வலி, நரம்பு வலி ஆகியன நீங்கும்.
  • பிரசவித்த பெண்கள் இழந்த பலத்தை மீட்டுத்தரும்.

 

Related Links: